புங். புளியடித்துறை வீதியைப் பார்வையிட்ட, வ. மா.ச. உறுப்பினர் திரு.விந்தன்.. (படங்கள்)
புங். புளியடித்துறை வீதியைப் பார்வையிட்ட, வ. மா.ச. உறுப்பினர் திரு.விந்தன்.. (படங்கள்)
இவ் வருடம் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய பிரதிநிதிகளான, திரு.தயாபரன் பாலசிங்கம், திருமதி.செல்வி சுதா ஆகியோர், “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் ஊடாக, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் நிர்வாக சபையிடம்” முன்வைத்த கோரிக்கையை அடுத்து, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் புங்குடுதீவு புளியடித்துறை வீதியைப் புனரமைத்துத் தரும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த வீதியை யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் அவர்கள் 17.11.2017 அன்று சென்று பார்வையிட்டார்.
குறித்த வீதி வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குரியது (RDD).
புங்குடுதீவு இறுப்பிட்டி பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் இவ்வீதியில் எந்தவொரு குடிமனைகளும், ஆள் நடமாட்டமும் இல்லாமல் காட்சியளிக்கின்றது.
ஆனாலும் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களம் குறிப்பிட்ட தூரம் வீதியினை ஏற்கனவே புனரமைத்துள்ளது.
நயினானாதீவுக்கான போக்குவரத்துத்துறையாக முன்பு பாவிக்கப்பட்ட புளியடித்துறைத் துறைமுகமும் இப்பொழுது பாவனையில் இல்லை.
இவ் வீதியினையும் மாகாணசபை உறுப்பினர் சென்று பார்வையிடுவதனைப் படங்களில் காணலாம்…
தகவல் & படங்கள்… ஊடகப்பிரிவு – திரு.விந்தன் கனகரெட்ணம்.
Average Rating