ஐஸ்வர்யா ராயை அழவைத்த போட்டோ கிராபர்கள்..!!

Read Time:1 Minute, 26 Second

நடிகை ஐஸ்வர்யாராய் எங்கு சென்றாலும் அவருடைய மகள் ஆரத்யாவுடன் செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

உதடு பிளவுப்பட்ட 100 குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுவதற்கு தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா, அவரது மகளுடன் சென்றார். இதை அறிந்ததும் ஏராளமான போட்டோ கிராபர்கள் தாய்- மகளை படம் எடுப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு இருந்தனர்.

இதனால் கூச்சல் அதிகமானது. எனவே ஐஸ்வர்யாராய், “இது புகைப்படம் எடுப்பதற்கான நிகழ்ச்சி அல்ல. குழந்தைகள் நிகழ்ச்சி. அவர்கள் பயப்படுகிறார்கள். அமைதியாக இருங்கள். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்ட வேண்டாம்” என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்.

ஆனால் யாரும் அதை கேட்கவில்லை. இதனால் மனம் வருந்திய ஐஸ்வர்யாராய் கண்களில் கண்ணீர் பெருகியது. இந்த நிகழ்ச்சியில் அவர் கண்கலங்கிய புகைப்படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொடந்து இணையத்தை கலக்கும் தோனி மகள் – வைரலாகும் காணொளி ..!!
Next post உடல் உஷ்ணத்தை குறைக்க மோர் குடிக்கலாம்..!!