சூரியனில் மிகப்பெரிய ஓட்டை: நாசா கண்டுபிடிப்பு – வீடியோ..!!

Read Time:2 Minute, 42 Second

சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதையும், அதன் வழியாக அதிவேகத்தில் வெளியேறும் சூரிய காற்று, பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் மற்றும் சூரிய மின்சக்தி கருவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என நாசா தெரிவித்துள்ளது.

நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வு மையம், சூரியனின் மேற்பரப்பை கடந்த 8-ம் தேதி படம் பிடித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த புறஊதா படத்தில், சூரியனின் மேற்பரப்பில் கருப்பாக மிகப்பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன் வழியாக சூரிய வெப்பக் காற்று அதிவேகமாக வெளியேறி வருகிறது. சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெப்பக் காற்று வெளியேறுவது அடிக்கடி நிகழும் சாதாரண நிகழ்வுதான் என்றாலும், இந்த ஓட்டை வழியாக அதிவேகத்தில் சூரியக்காற்று வெளியேறி வருகிறது.

சூரியனில் ஏற்படும் அகலமான ஓட்டை ‘கரோனா’ என அழைக்கப்படுகிறது. சூரியனின் காந்தபுல இயக்கம் காரணமாக இந்த ஓட்டைகள் ஏற்படுகிறது. அதில் இருந்து வெளிப்படும் சூரிய பிழம்புகள், கரோனா பகுதிக்குள் தற்காலிக ஓட்டைகளை ஏற்படுத்தும். சூரியனை சுற்றியுள்ள மற்ற பகுதியைவிட, இது அடர்வு குறைவான பகுதியாக உள்ளது. வழக்கமான சூரியகாற்றை விட, இந்த ஓட்டையிலிருந்து வெளியேறும் சூரிய ஒளிக்கற்றை துகள்கள் அதிவேகமாக வெளியேறுகிறது என விண்வெளி வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகிறது.

இந்த அதிவேக ஒளிக்கற்றை, பூமியின் காந்த மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் செயற்கைகோள்களும், சூரிய மின்சக்தி கருவிகளும் பாதிப்படைகின்றன.

சூரிய சுழற்சி காரணமாக இன்னும் பல கரோனா ஓட்டைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என விண்வெளி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நமீதா திருமணத்தில் ஜூலிக்கு ஏற்பட்ட அவமானம்..!!
Next post வெள்ளை நிறமாக மாறி செத்து மடியும் காக்கைகள்… அதிர வைக்கும் மர்மத்தால் பீதி..!!