என் தம்பி இங்கிலீஷ் படத்துல நடிச்சுட்டான்: மோகன் ராஜா பெருமை..!!

Read Time:1 Minute, 34 Second

‘ஜெயம்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘வேலாயுதம்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ராஜா. இவருடைய தம்பி ஜெயம் ரவி. மோகன் ராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட ஜெயம் ரவி தற்போது பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது ‘டிக் டிக் டிக்’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இந்தியாவின் முதல் விண்வெளிப்படமாக உருவாகி இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு இப்படத்தின் டிரைலர் உருவாகி இருக்கிறது. இந்த டிரைலரை பார்த்த அனைவரும் பாராட்டி, புகழ்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா, ‘என் தம்பி இங்கிலீஷ் படத்துல நடிச்சுட்டான்’ என்று பெருமையாக கூறியிருக்கிறார். மேலும், தமிழ் சினிமாவின் தரத்தின் அளவீட்டை உயர்த்தியதற்காக நன்றி என்றும் பதிவு செய்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படப்பிடிப்பில் பாம்பால் சன்னி லியோனுக்கு ஏற்பட்ட கொடுமை..!! ( வீடியோ)
Next post காலில் விழுந்த வணங்கிய ரசிகரை கன்னத்தில் அறையும் கமல்..!! (வீடியோ)