லிப்ஸ்டிக் எப்படி போடணும் தெரியுமா?..!!

Read Time:4 Minute, 1 Second

முகத்தின் அழகை அதிகரித்துக் காட்டும் பகுதிகள் கண்களும் உதடுகளும்தான். அந்தப் பகுதிகளில் சரியாக மேக்அப் போடாவிட்டால் முகத்தின் ஒட்டு மொத்த அழகும் காணாமல் போய்விடும். எனவே லிப்ஸ்டிக் புதிதாக போடுபவர்களுக்காக அவர்களின் நிறத்திற்கேற்ற சில டிப்ஸ்களை கொடுத்துள்ளனர் அழகியல் நிபுணர்கள்.

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் நம் நிறத்திற்கு ஏற்ற சரியான கலரை தேர்ந்தெடுக்கவேண்டும். நிறம் குறைவாகவோ, மாநிறமாகவோ உள்ள பெண்கள் லைட் பிரவுன், லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் பூச வேண்டும். சிவப்பு நிற பெண்கள் ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் நிற லிப்ஸ்டிக் பூச வேண்டும். லிப்ஸ்டிக் பூசும் போது, இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக பூச வேண்டும்; மேலும், கீழும் போட்டு இழுக்கக் கூடாது.

அதிகமாக லிப்ஸ்டிக் பூசி விட்டால், டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுத்து, சரி செய்யுங்கள். ஈரமான உதடுகளில் லிப்ஸ்டிக் போடக்கூடாது. இதழ்கள் ஈரமாக இருந்தால், முகப்பவுடரை தடவி காய்ந்த பின்னர் அதன் பிறகு லிப்ஸ்டிக் போட வேண்டும். லிப்ஸ்டிக் பூசிய பிறகு, உதட்டால் ஈரப்படுத்துவதோ, பானங்கள் அருந்துவதோ கூடாது.

முதலில் லிப் லைனரால் உதடுகளை அவுட் லைன் செய்து, பிறகு, அதன் மூலமே உதடுகளை நிரப்பவும். முதலில் லிப்ஸ்டிக்கை தடவி, பிறகு லிப் லைனரால் அவுட் லைனும் செய்யலாம். இம்முறை உதடுகளை மென்மையானதாக, கவர்ச்சியானதாக காட்டும். உதடு பெரிதானவர்கள், சின்ன உதடாக உள்பக்கம் வரைந்து, அதில் லிப்ஸ்டிக் பூச வேண்டும். மெலிதான உதடுகளைக் கொண்டவர்கள், உதடுகளின் வெளிப்பகுதியில் அவுட் லைன் வரைய வேண்டும். பருமனான உதடு கொண்டவர்கள், உதடுகளின் உள் பகுதியிலேயே அவுட் லைனை போட வேண்டும். மேல் உதடு தடிமனாக இருப்பவர்கள், மேல் உதட்டின் உள் பகுதியிலுமாக அவுட் லைன் போட வேண்டும். அவுட் லைன் போட்ட பகுதிகளில் லிப் பிரஷ் மூலம் லிப்ஸ்டிக்கை போடவும்.

லிப்ஸ்டிக் போட்டவர்கள் அதிக நேரம் வெயிலில் அலைவதோ, ஒரு லிப்ஸ்டிக்கை ஆறு மாதத்துக்கு மேல் பயன்படுத்துவதோ கூடாது. அதிக குளிரும் சரி, அதிக வெயிலும் சரி, இரண்டுமே லிப்ஸ்டிக்குக்கு எதிரிகள்; காரணம், உதடுகள் வறண்டு விடும். பொதுவாக லிப்ஸ்டிக் போடுவதற்கு முன், தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி, 10 நிமிடம் கழித்து வெது, வெதுப்பான வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, உதடுகளை துடைக்கவும். அதன் பிறகு, லிப்ஸ்டிக் போடுவது நல்லது. லிப்ஸ்டிக் தடவுவதற்கு முன், வாசலைன் உபயோகித்தாலும், உதடுகள் பளபளக்கும்.

பகல் நேரத்தில் இள நிறத்திலும், மாலை நேரத்தில் அடர் நிறத்திலும் பூசுங்கள். இரவு படுக்கச் செல்வதற்கு முன், உதடுகளில் வாசலைன் தடவிக் கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகாலையில் உடலுறவு கொண்டால் காய்ச்சல் வராதாம்… கேட்கவே புதுசா இருக்கா?..!!
Next post 26 வருடங்களுக்கு பிறகு இணையும் ரஜினிகாந்த் – மம்முட்டி..!!