தானா சேர்ந்த கூட்டத்தை திருப்பி அனுப்பிய விக்னேஷ் சிவன்..!!

Read Time:1 Minute, 37 Second

நானும் ரௌடிதான் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தற்போது இயக்கி வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இதில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் கார்த்திக், செந்தில், நந்தா, கலையரசன், சத்யன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்தில் இடம் பெறும் ‘சொடக்கு…’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி டிரெண்டானது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முடிவடைந்துள்ளது. இப்படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ், இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக கூறியிருக்கிறார். மேலும் நடிகர் சூர்யா, இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?..!!
Next post உலகின் முதல் பயோனிக் சிறுநீரகம் ரெடி.!!