அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் என்ன செய்யணும்?…!!
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்களால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். பொதுவாக, நெஞ்சு எரிச்சல் ஏற்பட உணவுப் பழக்கமே பிரதான காரணமாக இருக்கக்கூடும்.
அமிலம், காரம் நிறைந்த உணவுகள், வறுத்த, பொரித்த உணவுகள், செரிமானத்துக்கு சிரமமானவை, கோலா பானங்கள், செயற்கை பழரச பானங்கள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
மேலும், சாப்பிட்டவுடன் உறங்கச் செல்லும் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. அரைமணி நேரம் கழித்து 45 டிகிரி சாய்ந்த நிலையில் இருந்துவிட்டு தூங்கச் செல்லுங்கள்.
உறங்கும்போது இடதுபக்கம் சாய்ந்து உறங்குவது உணவுக் குழாயில் உள்ள உணவும் அமிலங்களும் உதரவிதானத்தைக் கடந்து வருவதைத் தடுக்கும். மேலும் இப்படி உறங்குவது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் நல்லது.
உறங்கும்போது கால்களுக்கு இடையில் ஒரு தலையணையும், வயிற்றின் அடிப்புறம் ஒரு தலையணையும் வைத்துக்கொள்ளலாம். பிரசவ காலத்துக்கு என சிறப்பான தலையணைகள், படுக்கைகள் சந்தையில் உள்ளன.
அவற்றையும் பயன்படுத்தலாம். தொடர்ந்து நெஞ்சு எரிச்சல் இருந்தால் நீங்களாக எந்த வைத்தியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
Average Rating