லட்சுமி மேனன் இடத்தை பிடிக்கும் தமன்னா..!!

Read Time:1 Minute, 29 Second

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. ஆக்‌ஷன் காமெடி படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

இப்படம் தற்போது இந்தியில் ரீ-மேக்காக உள்ளது. அஜய் தேவ்கன் தயாரிக்க, நிஷிகாந்த் காமத் இயக்குகிறார். பாபி சிம்ஹா வேடத்தில் சஞ்சய் தத்தும், சித்தார்த் வேடத்தில் பர்கான் அக்தரும் நடிக்கின்றனர். லட்சுமி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் தமன்னாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

அஜய் தேவ்கன் உடன் ஹிம்மாத்துவாலா என்ற படத்தில் தமன்னா நடித்திருக்கிறார். அதனால் நிச்சயம், இந்த படத்தில் தமன்னா நடிப்பார் என நம்பப்படுகிறது. விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய்ப்பாலுக்கான உணவுகள்..!!
Next post பெற்ற குழந்தையை கொன்று வாஷிங் மிஷினில் மறைத்து வைத்த தாய் கைது..!!