‘பத்மாவதி’ பட எதிர்ப்பிலும் ஜோடியாக சுற்றும் தீபிகா-ரன்வீர்சிங்..!!

Read Time:2 Minute, 15 Second

‘பத்மாவதி’ இந்தி பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தீபிகா தலைக்கு விலை நிர்ணயம் செய்து இருக்கிறார்கள். பல மாநிலங்களில் இந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராணி பத்மாவதியை அவமதித்துவிட்டதாக கூறி சில அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளன. இதனால் கடந்த 1-ந்தேதி ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படத்தை வெளியிடும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் யாரையும் அவமதிக்கும் வகையில் எடுக்கப்படவில்லை என்று இதன் இயக்குனர் சஞ்சய் லீலா பஞ்சாலி விளக்கம் அளித்துள்ளார். என்றாலும், பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

‘பத்மாவதி’ படத்தில் தீபிகா படுகோனே ராணி பத்மாவதியாகவும், ரன்வீர் சிங் மன்னர் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்திருக்கிறார்கள். எனவே இருவரும் ஜோடியாக எங்கும் செல்ல வேண்டாம் என்று இயக்குனர் பன்சாலி அறிவுரை கூறி இருந்தார். என்றாலும் அதையும் மீறி காதலர்களான தீபிகாவும், ரன்வீர் சிங்கும் ஜோடியாக விருந்துக்கு சென்றுள்ளனர்.

இந்தி பட இயக்குனர் ஜோயா அக்தர் தனது வீட்டில் நண்பர்களுக்கு விருந்து கொடுத்தார். தீபிகாவும், ரன்வீரும் இதில் கலந்துகொண்டனர். அங்கிருந்து கிளம்பும் போது இருவரும் கை கோர்த்தபடி சென்றுள்ளனர். ‘பத்மாவதி’ பிரச்சினை பெரிதாகி இருக்கும் நிலையில் ஜோடியாக சுற்றாதீர்கள் என்று சொன்னதை இவர்கள் கேட்காததால் இருவர் மீதும் இயக்குனர் பன்சாலி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்நாளில் கண்ணீர் வடிக்காத கண்கள் உண்டா?.. ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு தினம்..!! (வீடியோ)
Next post நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகும் பிரபுதேவாவின் காதல் படம்..!!