25 வயது பெண்ணை காதலித்து மணந்த 82 வயது தாத்தா..!!

Read Time:2 Minute, 16 Second

மலாவி நாட்டில் பேத்தி வயது பெண்ணை முதியவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலாவியின் தயோலோ நகரை சேர்ந்தவர் ரியூபின்சன் சிந்துலி (82) இவர் பொலிஸ் அதிகாரியாக வேலை செய்து கடந்த 1970-ல் பணி ஓய்வு பெற்றவர்.

இவர் டோவா என்ற பெண்ணை முதல் திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தது.

பின்னர் மனைவி இறந்துவிட இரண்டாவதாக ஒரு பெண்ணை சிந்துலி மணந்தார். அவரை பிரிந்துவிட்ட நிலையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

அந்த நேரத்தில் சிந்துலி வீட்டுக்கு ஜியோன் குவடானி (25) என்ற இளம் பெண் வீட்டு வேலைக்கு வந்துள்ளார்.ஜியோனிக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழக பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர். பேத்தி வயது பெண்ணை சிந்துலி காதலிப்பதற்கு ஊர் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஜியோன் வீட்டிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அவரை தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்ய சிந்துலி முடிவெடுத்தார்.ஆனால் இதற்கு தேவாலய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து சிந்துலி கூறுகையில், சட்டபூர்வமாக இருவரும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.எங்களுக்கு பல தடைகள் வந்தபோதும் அதை எதிர்த்து இணைந்துள்ளோம். அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஜியோன் உள்ளார் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓவியாவால் ஜூலிக்கு கிடைத்த அதிஷ்டம்… உண்மை காரணம் இதுதான்..!!
Next post விஜய் டிவி முதுகில் குத்திய பிக்பாஸ் ஆர்த்தி..! அதிரடியாக நிறுவனம் எடுத்த முடிவு?..!!