இறப்பு சான்றிதழ் பெற தாமதமானதால் குழந்தையின் உடலை பிரிட்ஜில் வைத்த தாய்..!!

Read Time:2 Minute, 1 Second

பெரு நாட்டில் நடைபெற்ற சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த மோனிகா பலோமினா என்ற பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை குழந்தை பிறந்தது. சரியான வளர்ச்சியடையாததால் குழந்தை திங்கட் கிழமை இறந்து விட்டது. இறப்பு சான்றிதழ் கொடுத்த பிறகே குழந்தைக்கு இறுதி சடங்குகள் செய்ய முடியும்.

இந்நிலையில் குழந்தைக்கு இறப்பு சான்றிதழை கொடுக்க மருத்துவமனை தாமதப்படுத்தியது. மேலும் மருத்துவமனை பாதுகாவலர் கொடுத்த தொந்தரவினால் குழந்தையின் உடலை மோனிகா தனது வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார். அதனால் அவரால் சான்றிதழ் பெற முடியவில்லை. அவர் குழந்தையின் உடலை வீட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார்.

செவ்வாய் கிழமை மருத்துவமனைக்கு சென்று இது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து மருத்துவமனை இயக்குனர் ஜூலியோ சில்வா பேசுகையில், பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. அவருக்கு நேர்ந்தது மிகவும் தவறாகும். காவலாளி மருத்துவமனை விதிமுறைகளை மீறியுள்ளார். உடலானது இறப்புச் சான்றிதழ் கொடுக்கும் வரை பிணவறையில் பாதுகாக்க பட வேண்டும். ஆனால் உடல் பெற்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்..!!
Next post ரசிகர்கள் சார்பாக சிம்புவுக்கு கோரிக்கை வைத்த தனுஷ்..!!