நிவின் பாலியை ஏன் பிடிக்கும்: ஷரத்தா ஸ்ரீநாத் விளக்கம்..!!

Read Time:2 Minute, 6 Second

நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் படம்‘ரிச்சி’. இதில் நிவின் ஜோடியாக ‌ஷரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.

கவுதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார். காஸ்ட் என் குரோவ் நிறுவனம் சார்பில் ஆனந்த் குமார், வினோத் ஷோர்னுர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இதில் நடித்தது பற்றி கூறிய ‌ஷரத்தா….

“தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லாத, எந்தவித சினிமா பின்புலமும் இல்லாத எனக்கு இதுவரை சினிமா பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இயக்குனர் கவுதமுக்காக ‘ரிச்சி’ படத்தை முதலில் ஒப்புக்கொண்டேன். அவரது தொழில் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது.

நான் சந்தித்துள்ள நடிகர்களில், மிகவும் அர்ப்பணிப்போடும், எந்தவித பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருக்கும் நடிகர் களில் ஒருவர் நிவின் பாலி. சக நடிகராகவும், நண்பராகவும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் மறுபடியும் பணிபுரிய ஆவலோடு இருக்கிறேன். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் பெயர் மேகா. ஒரு பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். தனது கருத்துக்களில் உறுதியான, தான் நம்பும் வி‌ஷயங்களுக்கு போராடும் குணமும் கொண்ட கதாபாத்திரம் இது. ‘ரிச்சி’ படத்தின் கதை சொல்லும் முறை மிகவும் வித்தியாசமானது. இது ஒரு புதுவித சினிமாவாக நிச்சயம் இருக்கும்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனி பெட்ரோல் – டீசல் தேவையில்லை: கார்களுக்கு எரி பொருளாக மாறும் பீர்..!!
Next post வீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்?..!! (கட்டுரை)