40 வயதிற்கு மேல் பெண்களுக்கு வரும் சிறுநீர் கசிவு பிரச்சனை..!!

Read Time:2 Minute, 54 Second

பெண்களை பாதிக்கும் உடல் பிரச்சனைகளில் முக்கியமானது, சிறுநீர் கசிவு. 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்சனைகளில், 60 சதவீத பிரச்சனை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. சிறுநீர் கசிவு பிரச்சனைக்கு, உரிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்பதே, பெரும்பாலான பெண்களுக்கு தெரிவதில்லை.

ஒரு சில காரணங்களால், பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படலாம். முதல் வகை, இருமல், தும்மல் வரும் போது, வேகமாக நடந்தால், சிரித்தால், குனியும் போது, சிறுநீர் கசிவு ஏற்படும். சிறுநீர் பையில் உள்ள தசைகளில் ஏற்படும் அழுத்தத்தினால் வரும் இந்த பிரச்சனை, ‘ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினென்ஸ்’ எனப்படும்.
இதற்கு பயந்து, நிறைய பெண்கள், நடைபயிற்சி செய்வது இல்லை; உடல் பருமன் ஆகிவிடும். அதன் தொடர்ச்சியாக, பல பிரச்சனைகள் வரும். அதன்பின், டாக்டரை பார்ப்பர். காரணத்தை அலசும் போது, சிறுநீர் கசிவின் தொடர்ச்சியாகவே இவை இருக்கும். வெளியில் போவதற்கு பயந்து, வீட்டிலேயே முடங்கி விடுவர்;

சிறுநீர் கசிவிற்கான இன்னொரு காரணம், பிரசவத்தின் போது, இடுப்புத் தசை வலுவிழந்து விடும். பிரசவத்திற்குப் பின், தசைகளை வலுப்படுத்துவதற்கான, ‘பெல்விக் புளோர் எக்சர்சைஸ்’ செய்யச் வேண்டும். இந்த உடற்பயிற்சியை செய்யாவிட்டால், வயது ஆக ஆக, தசைகள் மேலும் வலுவிழக்கும். இதுதான், கசிவிற்கு மூலக் காரணம்.

கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் கசிவது தெரிந்தால், உடனே, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இடுப்புத் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் மூலம், பிரச்சனையை சரி செய்து விடலாம். பிரச்சனை பெரிதான பின், உடற்பயிற்சி மட்டும் செய்வதால், பலன் இல்லை. இடுப்புத் தசைகளுக்கு, ‘சப்போர்ட்’ செய்வதற்கு, ‘ஸ்லிங்’ வைக்க வேண்டும்.

அறுபது சதவீத சிறுநீர் கசிவு பாதிப்பு உள்ள பெண்களில், 45 சதவீதம் பேர், சிறுநீர் பை, கூடுதலாக வேலை செய்யும், ‘ஓவர் ஆக்டிவ் பிளாடர்’ பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நின்றபடி உடலுறவில் ஈடுபடுவது சரியா?…!!
Next post இந்த அண்ணன் தங்கை பாசத்தை பார்த்தால் நம் கண்களில் கூட கண்ணீர் வரும்..!! (வீடியோ)