அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்..!!

Read Time:3 Minute, 15 Second

நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் உண்டாக்குவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பாக்டீரியாக்கள் பெரும்பாலும் வயிற்று வலி, ரத்தத்தில் விஷம் ஏறுதல், நிமோனியா (நுரையீரல் அழற்சி) ஆகிய மனிதர்களுக்கு தொடர்புடைய நோய்களை பரப்புகின்றன.

ஈக்களால் அவற்றின் கால்கள், இறக்கைகள், பாதங்கள் மூலமாக, நோய்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரப்ப முடியும். சொல்லப்போனால், அவை எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும், அவற்றால் உயிருடன் உள்ள பாக்டீரியாக்களை பரப்ப முடியும். “ஈக்களால் நோய்க்கிருமிகளை பரப்ப முடியும் என்பது மக்களுக்கு தெரிந்திருந்தாலும், எந்த அளவிற்கு அவை அபாயகரமானவை என்றும், எவ்வளவு தூரம் அதன் தொற்று இருக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியாது” என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பென் ஸ்டேட் பல்கலைக்கழக பேராசிரியர் டொனால்ட் பிரையண்ட். இவர் வீட்டில் பரவலாக காணப்படும் ஈக்களின் உடலின் மேலும், உடலினுள்ளும் இருக்கும் நுண்ணுயிரிகள் குறித்து மரபணு ஆய்வுமுறை வழியாக ஆய்வு செய்தார். வீட்டில் பொதுவாக பார்க்கக்கூடிய ஈக்கள் 351 வகையான பாக்டீரியாக்களை பரப்புகின்றன. வெப்ப காலங்களில் வரும் நீலநிற ஈக்கள் 316 வகை பாக்டீரியாக்களை பரப்புகின்றன. இந்த இருவகை ஈக்களாலும், அதிகப்படியான பாக்டீரியாக்கள் பரப்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பொது சுகாதார அதிகாரிகளால், நோய்களை திடீரென பரப்பும் காரணிகளாக ஈக்கள் பார்க்கப்படுவதாக, இந்த ஆய்வை ‘ஜர்னல் சயிண்டிபிக் ரிப்போட்’ என்ற சஞ்சிகையில் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“பொது சுகாதார அதிகாரிகளால் நம்பப்பட்ட வழியில், நோய்க்கிருமிகள் எவ்வாறு எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன என்பதன் கட்டமைப்பை இது காண்பிக்கிறது. மிகவும் வேகமான முறையில், நோய்க்கிருமிகளை பரப்புவதில் ஈக்களின் பங்கு உள்ளதையும் இது நிரூபிக்கிறது” என்கிறார் பேராசிரியர் பிரயண்ட்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனுஷ்காவின் திருமண மோதிரம் மட்டும் எவ்வளவு விலை தெரியுமா..!!
Next post ஜூலியுடன் கலா மாஸ்டர் போட்ட குத்தாட்டம்!! அரங்கமே அதிர்ந்து போன தருணம்..!! (வீடியோ)