ஆர்யாவிற்காக ஒன்று சேரும் திரிஷா-ஹன்சிகா..!!

Read Time:1 Minute, 30 Second

ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கஜினிகாந்த்’. இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயிஷா நடிக்கிறார். இப்படத்தை ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யாவின் (11.12.2017) பிறந்தநாளையும் ரஜினிகாந்த்தின் (12.12.2017) பிறந்தநாளையும் முன்னிட்டு 11.12.2017 ஆம் தேதி இரவு 11:59 மணிக்கு ‘கஜினி’ சூர்யா வெளியிட்டார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது இதன் இரண்டாவது போஸ்டரை வெளியிட இருக்கிறார்கள். இந்த போஸ்டரை நடிகை திரிஷாவும், ஹன்சிகாவும் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிட இருக்கிறார்கள். ஆர்யாவிற்காக திரிஷாவும் ஹன்சிகாவும் ஒன்று சேர்ந்து ‘கஜினிகாந்த்’ போஸ்டரை வெளியிடுவது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்தே தொடைப்பகுதியில் உள்ள கருமையை ஈஸியா சரிசெய்யலாம்..!!
Next post காதலன் முகத்தில் ஆசிட் ஊற்றி கணவன் என பெண் நாடகம்: ‘மட்டன் சூப்’ மூலம் வெளிவந்த உண்மை..!!