பொங்கலுக்கு வீரவிளையாட்டு உறுதி – `மதுரவீரன்’ ரிலீஸ் தேதியை அறிவித்த விஜயகாந்த்..!!
பொங்கல் பண்டிகைக்கு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச் பிரபுதேவாவின் குலேபகாவலி ரிலீசாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. விஷால் நடிப்பில் உருவாகி வரும் இரும்புத்திரை பொங்கல் ரேசில் இருந்து விலகி குடியரசு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் மதுரவீரன் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளுக்கு வீரவிளையாட்டு.. #மதுரவீரன் பொங்கல் வெளியீடு என்று நடிகர் விஜயகாந்த் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் போஸ்டருடன் அறிவித்துள்ளார்.
பி.ஜி.முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். சமுத்திரகனி, ‘வேல’ ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வி.ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து `என்னடா நடக்குது நாட்டுல’ என்ற சிங்கிள் ஒன்று வெளியாகி வைரலாகி வரும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
Average Rating