பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்..!!
ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் `மீசைய முறுக்கு’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை சுந்தர்.சி அவரது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருந்தார்.
இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படத்தையும் சுந்தர்.சி தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். பார்த்திபன் பெரியசாமி என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் புதிய படம் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. இதில் ஆதி ஹாக்கி வீரராக நடிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கான பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றதாக ஆதி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பூஜையில் நடிகர் ஹிப் ஹாப் ஆதி, இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜன், ஷாரா, விஜய் விருஸ், பென்னி ஆலிவர், கவுசிக் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. `மீசைய முறுக்கு’ படத்திற்கு பிறகு அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
Average Rating