இயற்கை முறையில் முடியை நேராக்க வேண்டுமா? சில எளிய டிப்ஸ்..!!

Read Time:4 Minute, 35 Second

அனைவரும் நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று பல உடல் பராமரிப்புகள், கூந்தல் பராமரிப்பு என்று செய்து வருவார்கள். ஏனெனில் அப்போது நன்கு அழகாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் சிலரது முடியானது சுருட்டையாக, அடங்காமல் இருக்கும். இதனால் பெரும்பாலானோர் கூந்தலை நேராக்க ஐயர்னிங் மற்றும் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஏனெனில் இந்த உலகில் தனக்கு இயற்கையாக இருக்கும் கூந்தலை யாருக்கு தான் பிடிக்கிறது.

கூந்தல் நேராவதற்கு செயற்கை முறையை கையாண்டால், கூந்தல் உதிர்தல், வெடிப்புகள், வறட்சி என்று பல பிரச்சனைகள் கூந்தலில் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் கூந்தலை நேராக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு ஒரே வழி இயற்கை முறை தான். இந்த இயற்கை முறையால் கூந்தல் நன்கு வலுபெறுவதோடு, ஆரோக்கியமாக, பொலிவோடு காணப்படும்.

வாழைப்பழம் மற்றும் பப்பாளி பேக்வா

ழைப்பழம் மற்றும் பப்பாளியை நன்கு மசித்துக் கொண்டு, அதில் சிறிது தேனை சேர்த்து கலந்து, பின் அந்த கலவையை கூந்தலில் தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். குளித்தப் பின் கூந்தல் காய்ந்ததும், கூந்தலை சீவிப் பாருங்கள், கூந்தல் நன்கு நேராக காணப்படும். அதிலும் இந்த ஹேர் பேக்குகளை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கூந்தல் விரைவிலேயே நேராகிவிடும்.

மூல்தானி மெட்டி மற்றும் அரிசி மாவு

ஒரு கப் மூல்தானி மெட்டியுடன், 5 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி, நன்கு அடித்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் கூந்தலுக்கு வெதுவெதுப்பாக எண்ணெயை காய வைத்து, தலைக்கு சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு இந்த கலவையைத் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், கூந்தல் சீக்கிரம் நேராகிவிடும்.

தேங்காய் மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு தேங்காய் முழுவதையும் நன்கு அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாற்றை விட்டு, ஃப்ரிட்ஜில் க்ரீம் போன்று ஆகும் வரை வைக்க வேண்டும். பிறகு அந்த க்ரீம் கலவையை கூந்தலுக்கும், ஸ்கால்ப்பில் படும்படியும் தடவி, ஒரு துணியால் 1 மணிநேரம் கட்டிக் கொண்டு, பின்னர் குளிக்க வேண்டும். இந்த மாதிரி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கூந்தல் இயற்கையாகவே நேராகிவிடும்.

நெல்லி பவுடர், சீகைக்காய் மற்றும் அரிசி மாவு

ஒரு பெளலில் அரை கப் நெல்லிக்காய் பவுடருடன், அரை கப் சீகைக்காய் மற்றும் அதே அளவு அரிசி மாவையும் எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு, கூந்தலில் தடவி, குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு மேல் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், கூந்தல் நன்கு நேராக பட்டுப்போன்று மின்னும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் துணையிடம் கேட்க கூச்சமா இருந்தால்… இப்படியும் கேட்கலாம்…!!
Next post மூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி..!!