பயன்கள் பல தரும் வீட்டு மூலிகைச் செடிகள்..!!

Read Time:3 Minute, 36 Second

துளசி இந்து மதத்தின் புனிதச் செடியாக கருதப்படுகிறது. மேலும் இது ‘ஹோலி பேசில்’ என்றும் அழைக்கப்படுகிறது. மருத்துவ குணங்களில் தலை சிறந்து இருப்பதால் மூலிகைச் செடிகளின் ராணி என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது ஹெர்பல் டீயாக போட்டுக் குடிக்கலாம். இந்த துளசியில் நான்கு வகைகள் உள்ளன.

ராம துளசி, வன துளசி, கிருஷ்ணா துளசி, கற்பூர துளசி. இதில் கற்பூர துளசி பெரும்பாலும் வெளி பயன் பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. கற்பூர துளசி எண்ணெய் காது பிரச்சினைகள் மற்றும் காது சொட்டு மருந்தாக பயன் படுகிறது. மேலும் இதன் ஆயில் சோப்பு, ஷாம்பு போன்று உடம்பை சுத்தப்படுத்தும் பொருளாகவும் விளங்குகிறது.

துளசியில் உள்ள கிருமி எதிர்ப்பு சக்தி, பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி பயோடிக் பொருட்கள் ஆகியவை காய்ச்சல், ஜலதோஷம் மற்றும் மூச்சுப் பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. ராம துளசி இலைகள் நீண்ட நாள்பட்ட மூச்சுப் பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த துளசியின் சாறு காய்ச்சல், ஜலதோஷம், இருமல் மற்றும் சுவாச பிரச்சினைகளை சரி செய்கிறது.

மேலும் மலேரியாவை சரி செய்யவும் துளசி பயன்படுகிறது. ஜீரண பிரச்சினை, காலரா, இன்ஸோமினியா, ஹைஸ்ட்ரியா போன்றவற்றை எதிர்த்தும் செயல்படுகிறது. சுத்தமான துளசி இலைகளை மில்லியன் மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

வெந்தயம் என்பது மெத்தி என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது. நமது உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கு வெந்தயம் மிகவும் உதவி புரிகிறது. இது எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்றபடி வளரும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடியாகும். உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கும், உடல் எடையை அதிகரிக்கவும் பயன்படுகிறது. வெந்தயம் கல்லீரல் புற்றுநோயை தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

பாலூட்டும் புதிய தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. மேலும் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி, குடல் அலர்ஜி, குடல் அல்சர் போன்றவற்றை தடுப் பதோடு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. கெட்ட சுவாசத்தை தடுக்கிறது. இந்த அற்புதமான மூலிகைச் செடிகளை வீட்டிலேயே வளர்த்து பயன் பெறலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதயநிதிக்காக இதை செய்யும் ஏ.ஆர்.ரகுமான்..!!
Next post அஜித்தை ஃபாலோவ் பண்ணும் பிரபல சீரியல் நடிகை! என்ன செய்தார் தெரியுமா..!!