கமலை அடுத்து ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்..!!
சிபிராஜ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சத்யா’. இதில் இவருடன் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மேலும் ஆனந்த்ராஜ், யோகி பாபு, சதீஷ், ரவி வர்மா, உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருந்த இந்த படம், தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிராஜே தயாரித்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கமல் நடித்த ‘சத்யா’ படத்தலைப்பை கைப்பற்றி அதற்கு பெருமை சேர்த்த சிபிராஜ், அடுத்ததாக ரஜினி படத்தின் தலைப்பை கைப்பற்றி இருக்கிறார். ரஜினி நடித்த ‘ரங்கா’ என்ற படத்தை தலைப்பை அடுத்த படத்திற்கு வைத்திருக்கிறார் சிபிராஜ். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது. இப்படம் பனிகள் சூழ்ந்த பகுதிகளில் நடக்கும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.
Average Rating