பாகுபலியை பின்னுக்கு தள்ளிய விக்ரம் வேதா..!!

Read Time:1 Minute, 58 Second

இணையதளங்களில் படங்களைப் பற்றிய தகவல்களை கொடுப்பதில் முக்கியமானது ஐஎம்டிபி (IMDb). இந்த இணையதளம் 2017-ம் ஆண்டிற்கான சிறந்த 10 இந்திய படங்களை வெளியிட்டு இருக்கிறது.

இதில் 10-வது இடத்தில் மலையாள படமான ‘தி க்ரேட் பாதர்’, 9-வது இடத்தில் ‘மெர்சல்’, 8-வது இடத்தில் இந்திப் படமான ‘ஜாலி எல்.எல்.பி 2’, 7-வது இடத்தில் இந்திப் படமான ‘டாய்லெட்- ஏக் பிரேம கதா’, 6-வது இடத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான ‘தி காஸி அட்டாக்’, 5-வது இடத்தில் இந்திப் படமான ‘இந்தி மீடியம்’, 4-வது இடத்தில் இந்திப் படமான ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’, 3-வது இடத்தில் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’, 2-வது இடத்தில் ராஜமெளலியின் ‘பாகுபலி – 2’ மற்றும் முதல் இடத்தில் மாதவன் – விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ என பட்டியலிட்டு இருக்கிறார்கள்.

தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்று, அதிக ரசிகர்களை கவர்ந்த ‘விக்ரம் வேதா’ படத்துக்கு IMDb இணையம் முதல் இடத்தைக் கொடுத்திருப்பது படக்குழுவினரை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

விக்ரம் வேதா படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார், ஸ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். புஷ்கர் காயத்ரி இயக்கி இருந்தார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதவிடாய் காலத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்க அட்வைஸ்..!!
Next post இறந்த கணவரின் சடலத்துடன் 24 மணி நேரம் மணி செய்த காரியம்… அதிர்ச்சியில் ஊர்மக்கள்..!!