ஒபாமா, ஹிலாரி கூட்டு பிரச்சாரம்
Read Time:1 Minute, 19 Second
அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஒபாமாவும், அவரை எதிர்த்து வேட்பாளராக களமிறங்கிய ஹிலாரி கிளிண்டனும் கூட்டாக பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். வரும் 27ந் தேதி நடைபெற உள்ள பிரச்சாரத்தில் இருதலைவர்களும் ஒரே மேடையில் தோன்றி முதல் முறையாக பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக ஒபாமாவின் பிரச்சாரக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக இரு தலைவர்களும் வாஷிங்டனில் சந்திக்கபோவதாகவும், அப்போது ஹிலாரி தனது நன்கொடையாளர்களை ஒபாமாவுக்கு அறிமுகப்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஒபாமாவை எதிர்த்து களமிறங்கிய ஹிலாரி கிளிண்டன், பல்வேறு மாகாணங்களில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் ஒபாமாவுக்கு ஆதரவு பெருகியதை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
Average Rating