திருடனை காதலித்த நயன்தாரா! இந்த ஷாக் ப்ளான் தெரியுமா?..!!

Read Time:3 Minute, 46 Second

முகம் காட்ட தைரியம் இல்லாத முகநூல் போராளிகள் பலர் நடிகர், நடிகையரின் புகைப்படங்களை தங்கள் ப்ரொபைல் பிக்சராக வைத்துக் கொள்கின்றனர்.

ஆனால் பீகார் மாநில போலீசார் திருடன் ஒருவனை பிடிக்க நடிகை ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்திய விவகாரம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகரான சஞ்சய் குமார் மஹாதேவாவின் மொபைல் போன் ஒன்று திருடு போயுள்ளது.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார் முகமது ஹஸ்னன் எனும் திருடனிடம் அந்த மொபைல் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.இதனை தொடர்ந்து காவல் அதிகாரி மதுபாலா தேவி தலைமையிலான போலீசார் முகமதுவை பிடிக்க முயற்சி செய்து வந்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் தப்பித்துக் கொண்டே வந்துள்ளான்.

அந்த போனில் இருந்து மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணை நடத்திய போலீசார், முகமதுவின் நம்பரை கண்டுபிடித்துள்ளனர்.இதனை அடுத்து திருடனை பிடிக்க போலீசார் அதிரடி திட்டம் ஒன்றை தீட்டினர். அதன்படி காவல் அதிகாரி மதுபாலா, முகமதுவின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு, அவனுடன் சிறிது சிறிதாக பேசி பழக ஆரம்பித்துள்ளான்.

ஒரு கட்டத்தில் மதுபாலா, முகமதுவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் முகமது காதலை ஏற்க மறுத்து விட்டான். மதுபாலாவின் தொடர் முயற்சியால் ஒரு கட்டத்தில் முகமதுவும் காதலிப்பதாக தெரிவித்துள்ளான். மேலும், மதுபாலாவின் புகைப்படத்தை அனுப்புமாறும் கேட்டுள்ளான்.

ஆனால் மதுபாலா தனது புகைப்படத்திற்காக பதிலாக நடிகை நயன்தாராவின் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.நயன்தாராவின் அழகில் மயங்கிய திருடன், அவர் தான் மதுபாலா என நினைத்துக் கொண்டு அவரிடம் காதலில் உருகி உள்ளான்.

ஒரு கட்டத்தில் மதுபாலாவை நேரில் பார்த்தே ஆக வேண்டும் என முகமது வற்புறுத்தி உள்ளான். இது தான் சரியான நேரம் என கருதிய மதுபாலா குறிப்பிட்ட இடம் ஒன்றிற்கு முகமதுவை வர சொல்லி இருக்கிறார்.முகமதுவும் அதேபோல் குறிப்பிட்ட இடத்திற்கு வர அங்கு மறைந்திருந்த போலீசார் அவனை கையும் களவுமாக பிடித்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில் வேறொரு திருடனிடம் இருந்து பாஜக பிரமுகரின் மொபைலை 4,500 ரூபாய்க்கு வாங்கியதாக தெரிவித்துள்ளான். இதனை அடுத்து அந்த திருடனையும் கைது செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காளானின் கணக்கற்ற நன்மைகள்..!!
Next post பெண்களின் உடலுறவு கனவுகள்..!!