ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்க தலைவர் ஜோர்ஜ் புஷ் சந்திப்பு!

Read Time:2 Minute, 23 Second

un-logo[1].jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு இம்மாதம் 19ம் திகதி நிவ்யோர்க்கில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ராஜபக்ஷ உள்ளடங்கலாக தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளின் தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி புஷ் வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றுக்காக அழைத்துள்ளார். இதன்போதே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை ஐ.நா. சபையின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 19ம் திகதி உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலி நாட்டு தலைவரின் உரையின் பின்னரும்; மற்றும் வெனிசுலா நாட்டு ஜனாதிபதியின் உரையின் முன்னதாகவும் மஹிந்த ராஜபக்ஷவின் உரை இடம்;பெறவுள்ளது. இக்கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் பயணத்தின் போதே ஜோர்ஜ் புஷ்ஷ_டனான சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிவ்யோர்க்கில் தங்கியிருக்கும் இந்த காலப்பகுதியில் நோர்வே பிரதம மந்திரி, அமெரிக்க கொங்கிரஸ் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

ஐ.நா. சபையின் 61வது பொதுச்சபைக் கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க்கிழமை பஹ்ரேனைச் சேர்ந்த சேய்க்கா ஹயா ரஷீட் அல் கலீபாவின் தலைமையில் ஆரம்பமானது. 37 ஆண்டுகளில் ஐ.நா. சபையின் கூட்டத்தொடர் ஒன்றுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. சபையின் பொதுச்சபைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ஒரே இலங்கையர் து}துவர் ஷேர்லி அமரசிங்க ஆவார். இவர் 1976ம் ஆண்டு 31வது கூட்டத்துக்கு தலைமை வகித்திருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புலிகளுடன் பேச்சுவார்த்தை : சிறிலங்க அரசு நிபந்தனை!
Next post கைப்பற்றிய பகுதிகளில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற்றால் பேச்சுவார்த்தை: புலிகள் நிபந்தனை