சினிமாவில் 14 வருடங்களை நிறைவு செய்த நயன்தாரா..!!
சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. ஹரி இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதால் ராசியான நடிகை ஆனார். ஆரம்பத்தில் ஒருசில தமிழ் படங்களில் நடித்த இவர், குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்தார்.
‘சந்திரமுகி’ படத்தில் ரஜினி ஜோடி ஆனார். குசேலன் படத்திலும் ரஜினியுடன் நடித்தார். தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் முக்கிய இடம் பிடித்தார். தென்னக படங்களில் பேசப்படும் இடத்தை பிடித்தார்.
இதற்கிடையே சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்தார். என்றாலும், அதில் இருந்து மீண்டு வந்து நடிப்பில் முழு கவனம் செலுத்தினார். தனது திரையுலக மார்க்கெட்டை நிலையாக வைத்துக் கொண்டார்.
தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘அறம்’ படம் மிகவும் பேசப்பட்டது. நயன்தாரா நடிக்கிறார் என்றாலே அந்த படத்துக்கு தனி மவுசு என்ற நிலை இப்போதும் நீடிக்கிறது. இன்றும் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
நடிக்க வந்து இன்றுடன் (டிசம்பர் 25) நயன்தாராவின் திரைஉலக பயணத்தில் 14 வருடங்கள் நிறைவு பெறுகிறது. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நெருங்கி பழகி வருகிறார். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதுபற்றி கவலைப்படாமல் நடிப்பில் சாதனை படைத்து நிலைத்து நிற்கிறார்.
Average Rating