முக்கிய கட்டத்தில் `டிக் டிக் டிக்’..!!
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் `டிக் டிக் டிக்’.
சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவெற்பை பெற்றுள்ளது.
டீசர் வெளியானது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.
டி.இமான் இசையில் சிங்கிள் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவி மற்றும் நிவேதா பெத்துராஜ் டப்பிங்குக்காக தங்களது குரல்களை பதிவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Average Rating