இருசக்கர வாகனம் ஓட்டும் ஆண்களுக்கு ஏற்படும் வலிகளும்.. தீர்வுகளும்..!!

Read Time:4 Minute, 8 Second

00நீங்கள் இருசக்கர வாகனம் ஓட்டும் ஆணாக இருந்தால், உங்களுக்கு ஏற்படும் வலிகள் என்னென்ன தெரியுமா?

‘பைக்’ போன்ற இரு சக்கர வாகனங்களை பல ஆண்டுகளாக ஓட்டும் ஆண்களில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேர் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். ஒரே நிலையில் இருந்து வெகுநேரம் வாகனத்தை ஓட்டிச் செல்வது, கரடு முரடான சாலைகளில் செல்லும்போது முதுகுத்தண்டுப்பகுதி அதிக அதிர்வுக்கு உள்ளாவது போன்றவை முதுகு வலிக்கான காரணங்கள்.

வாகனம் ஓட்டும்போது இரண்டு கைகளுக்கும், விரல்களுக்கும் தொடர்ந்து ஒரே மாதிரி வேலை கொடுத்துக்கொண்டிருப்பதால், மணிக்கட்டு மற்றும் கைவிரல்களிலும் வலி ஏற்படும். தோள்பட்டை வலி, கழுத்து வலியும் ஏற்படலாம். கீயரை மாற்றுவது, போக்குவரத்து நெருக்கடியான நேரங்களில் அடிக்கடி கால்களை ஊன்றுவது போன்ற செயல்களால் கால்களிலும் வலி தோன்றும். இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களில் சிலருக்கு கை பகுதி நரம்புகள் மரத்துப்போகும் நிலையும் ஏற்படுகிறது. குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமானால் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கழுத்து முதல் பாதம் வரை வலியால் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வலிகளுக்கான தீர்வுகள் :

தொடர்ச்சியாக இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டாம். 45 நிமிடங்களை தாண்டிவிட்டால், வண்டியை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு, இறங்கி உடலை இயல்புக்கு கொண்டுவந்துவிட்டு, மீண்டும் பயணத்தை தொடருங்கள். இரண்டு மணிநேரத்திற்கு மேற்பட்ட பயணத்திற்கு நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்துங்கள்.

மழைக்காலத்தில் முடிந்த அளவு இரு சக்கர வாகனப் பயணத்தை தவிர்த்திடுங்கள். குண்டுங்குழியுமான சாலைகளில் பயணித்தால் உடலில் பலகீனமாக இருக்கும் பகுதிகள் அனைத்துமே வலிக்கும். வாகனத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்யுங்கள். ‘ஷாக் அப்சர்பெர்’ போன்றவைகளை சரிசெய்யுங்கள். சர்வீஸ் செய்யப்படாத வாகனங் களால் உடல் வலி அதிகரிக்கும்.

வலிகள் ஏற்படும்போது ஓய்வெடுத்துப் பாருங்கள். சாதாரண வலிகள் ஓய்வு மூலம் சரியாகி விடும். அப்படி சரியாகாவிட்டால் டாக்டரை சந்தியுங்கள். மாத்திரை மற்றும் பிசியோதெரபி மூலம் சரி செய்துவிடலாம். எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ.ஸ்கேன் போன்றவை ஒருவேளை தேவைப்படலாம். பரிசோதனையில் கண்டறிந்த பாதிப்புகளின் அடிப்படையில் சிகிச்சைகள் தேவைப்படும்.

மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள். நீங்கள் சுயநினைவில் இருக்கும்போது ஒருவேளை வாகனம் விபத்தில் சிக்கினால், சுயபாதுகாப்பு உணர்வு மேலோங்கி முகத்தில் அடிபடாதவகையில் சுதாரித்துக்கொள்வீர்கள். மதுவின் போதையில் இருந்தால் உங்களால் முகத்தை பாதுகாக்க முடியாது. அது மிகுந்த ஆபத்தையும், கஷ்டத்தையும் உருவாக்கிவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டுவிட்டரில் ஆபாச வீடியோலை வெளியிட்டு திட்டு வாங்கிய நடிகை..!!
Next post மரணித்துக்கொண்டிருந்த மனைவியின் படங்களை வைத்து கணவர் செய்த அதிர்ச்சி காரியம்..!!