இரும்புத்திரையை மூடிய விஷால்..!!
துப்பறிவாளன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்திலும், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு இன்று நடந்துள்ளது. படப்பிடிப்பை முடிந்ததையொட்டி படக்குழுவினருடன் விஷால், சமந்தா ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 6-ல் மலேசியாவில் நடைபெற உள்ளது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார்.
ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு ‘இரும்புத்திரை’ ரிலீசாகிறது.
Average Rating