கமலின் முன்னாள் மனைவி சரிகா இப்படியொரு பிரச்சனையில் சிக்கியிருக்கரா?..!!
நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதோடு அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சந்தோஷமடைந்து வர வந்தார். ஸ்ருதியின் அம்மாவும், கமலின் முன்னாள் மனைவியுமான சரிகா பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ருதியின் அம்மா சரிகா கடந்த நவம்பர் மாதம் தன் தாயை இழந்தார். அதற்கு பின் அவருக்கு எதிர்பாராத பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. மராட்டிய சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான சரிகா, தான் சம்பாதித்த பணத்தில் தன் அம்மா மூலம் பெரிய அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியிருந்திருக்கிறார்.
ஆனால் அவரின் அம்மா இறப்பதற்கு முன் இந்த சொத்தை தன் குடும்ப நண்பரான டாக்டர் ஒருவரின் பெயரில் உயில் எழுதி வைத்துவிட்டாராம். விசயம் தெரிந்த சரிகா பெரும் அதிர்ச்சியாகியுள்ளார் சொந்த வீடு இல்லாமல் தவித்ததோடு, நீதிமன்றத்தில் சொத்து வழக்குக்காக அலைந்தார். இந்நிலையில் இவரது தோழியான நுஸ்ஸத் தன் அண்ணனான நடிகர் அமீர் கானிடம் விசயத்தை சொல்லியிருக்கிறார்.அமீர்கான் அவருக்கு உதவி செய்துள்ளார்.
தற்போது தங்க வீடு இல்லாமல் இருக்கும் சரிகா, ஸ்ருதி வாங்கியுள்ள வீட்டில் தான் தங்கியிருக்கிறாராம்.
Average Rating