எந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு மோகம் அதிகமாக உண்டாகும்?..!!
உடலில் மச்சம் இல்லாமல் உலகில் யாருமே இருக்க முடியாது. அந்த மச்சம் பிறக்கும்போதும் இருக்கும். சில மச்சங்கள் இடையிலேயும் தோன்றும். அந்த மச்சத்தை வைத்து நம்முடைய குணங்களை ப் பற்றி சொல்வது தான் மச்ச சாஸ்திரம். அதை வைத்தே உடலுறவு விஷயத்தில் நீங்கள் எப்படி என்றும் தெரிந்து கொள்ள முடியும்.
மேலுதட்டுக்கு மேல்புறத்தில் மச்சம் இருப்பவர்கள் ‘அந்த‘ விஷயங்களில் படு ஸ்மார்ட். உதட்டுக்கு மேல் தான் காமதேவன் குடியிருப்பதாக மச்ச சாஸ்திரம் கூறுகிறது. அதனால் தான் அந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் காம ஊற்றாக இருப்பார்களாம்.
கண்ணில் புருவத்துக்குக் கீழே மச்சம் இருந்தால் அவருடைய உறவில் நிறைய சிக்கல்கள் இருக்கும். வாழ்க்கைத் துணையிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டு மகிழ்ச்சியே இல்லாமல் இருப்பார்கள். எப்போதுமே துணையுடன் அசௌகரியமாகவே உணர்வார்கள்.
மூக்கின் மேல் மச்சம் இருப்பவர்கள், குறிப்பாக நுனி மூக்கில் மச்சம் இருப்பவர்களுக்கு‘அந்த‘ விஷயத்தில் நிறைய பிரச்னைகள் வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியின்றி நிறைய சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
வலது கண்ணின் இமைக்கு மேல் மச்சம் இருப்பவர்கள் அந்த விஷயத்தில் எப்போதுமே டாப் தான். இந்த மச்சம் உள்ளவர்கள் கட்டில் விஷயத்தில் ஒருபோதும் சளைத்தவர்கள் இல்லை.
மூக்கின் ஒரத்தில் கன்னத்தையொட்டிய பகுதியில் மச்சம் இருப்பவர்கள் தன் சொந்த உறவுகளின் மேல் (அத்தை, மாமா பிள்ளைகள்) அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள். குறிப்பாக பெண்களுக்கு அந்த இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்க்கை முழுவதும மகிழ்ச்சி அவர்கள் கூடவே வரும்.
கீழ் உதட்டிலேயே மச்சம் இருப்பவர்கள் ரொமான்ஸ் பண்ணுவதில் வெளுத்து வாங்குவார்கள். பலருடன் உறவு கொண்டு மகிழ்வார்கள். அந்த நேரத்தில் அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் வாழ்க்கையில் பல சமயங்களில் அது மன உளைச்சலையும் அழுத்தத்தையும் தரும்.
தொடையின் உள்பகுதியில் மச்சம் இருப்பவர்கள் காதல் வாழ்க்கையில் மிகச் சிறந்து விளங்குவார்கள்.
கழுத்தின் கீழ்ப்பகுதியில் அழுத்தமாக பெரிய மச்சம் இருப்பவர்கள் காதலில் உறுதியாக இருப்பார்கள். அதற்கு குடும்பத்தில் பலருடைய சப்போர்ட்டும் கிடைக்கும்.
வயிற்றுக்கும் மேல் இடுப்புப் பகுதியில் மச்சம் உள்ளவர்கள் ஆணாக இருந்தால் அழகு தேவதையையும் பெண்ணாக இருந்தால் மன்மதனையும் திருமணம் செய்வார்கள். அந்த விஷயத்திலும் அழகாக நளினமாக நடந்து கொள்வார்கள்.
முதுகுப்புறத்தில், அதாவது, பின்பக்க தோள்பட்டையில் மச்சம் இருப்பவர்கள் சிறந்த திருமண வாழ்க்கையையும் நல்ல உறவையும் பெறுவார்கள். அவர்களுக்கு அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்க்கைகத் துணை கிடைக்கும்.
Average Rating