பொங்கல் தினத்தில் 9 படங்கள் மோதல்?..!!
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புதிய தமிழ் படங்கள் வெளியாகின்றன. சில படங்களை வியாழக்கிழமையிலும் வெளியிடுகிறார்கள். இன்று இந்த ஆண்டின் கடைசி வெள்ளி. இன்றைய தினத்தில் ‘களவாடிய பொழுதுகள்’, ‘பலூன்’, ‘உள்குத்து’, ‘சங்கு சக்கரம்’ உள்ளிட்ட படங்கள் திரைக்கு வந்துள்ளன.
2018-ம் ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 5-ந்தேதி ‘விதி மதி உல்டா’, ‘கில்லி பம்பரம் கோலி’ படங்கள் வெளியாகின்றன. அடுத்து வரும் பொங்கல் தினத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, பிரபுதேவா நடித்துள்ள ‘குலேபகாவலி’, சுந்தர்சி இயக்கியுள்ள ‘கலகலப்பு-2’, விமல் நடித்திருக்கும் ‘மன்னர் வகையறா’, சூரியாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்‘, உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நிமிர்’ விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்திருக்கும் ‘மதுரவீரன்’, ‘ஒருநல்ல நாள் பார்த்து சொல்கிறேன்’ ஆகிய 9 படங்கள் திரைக்கு வர தயாராக இருக்கின்றன.
இதுதவிர விஷால் நடித்துள்ள ‘இரும்புத்திரை’, ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி உள்ள ‘டிக்டிக்டிக்’ படங்களும் ஜனவரி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த படங்களில் எத்தனை பொங்கல் தினத்தில் திரைக்கு வரும்? எத்தனை படங்கள் வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்படும்? என்பது கடைசி நேரத்தில் தான் தெரியவரும்.
Average Rating