கை மூட்டு, கால் மூட்டு கருமையை போக்கும் இயற்கை வழிகள்..!!

Read Time:2 Minute, 34 Second

பெண்கள் முகம், கழுத்து அழகை பராமரிக்க கொடுக்கும் முக்கியத்துவத்தை கை மூட்டு, கால் மூட்டுப் பகுதிகளுக்கு கொடுப்பதில்லை. அதனால் சிலருக்கு கை மூட்டு, கால் மூட்டுப் பகுதிகள் கருப்பாய் கரடு தட்டிக் காணப்படும். மூட்டுத் தோல் பகுதி ஆரோக்கியமாக, இயல்பான நிறத்தில் இருக்க சில எளிய விஷயங்களைச் செய்தாலே போதும்.

மூட்டுப்பகுதியை மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டத்தை சீர்செய்ய முடியும். ரத்த ஓட்டம் சீரானால் கருப்புத் திட்டுக்கள் மறையும். தேங்காய் எண்ணெயை மூட்டுப் பகுதியில் விட்டு, 5 – 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்தால், நல்ல பலன் தெரியும். ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

இறந்த செல்களை உடனடியாக அகற்றும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சளுடன், பசும்பால் சேர்த்து, மூட்டுப்பகுதியில் தடவி, இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் காயவிட வேண்டும். பின்னர், சோப் பயன்படுத்தி, மூட்டு பகுதியைக் கழுவ வேண்டும். தினமும் இதனைச் செய்து வந்தாலே, சில நாட்களில் நல்ல பலன் தெரியும்.

கற்றாழையைத் தோல் சீவி, அதனுள் இருக்கும் ஜெல்லை அப்படியே மூட்டுப் பகுதியில் பூசி, ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். இது சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோல் கருமை அடைவதைத் தடுக்கும்.

பாதி எலுமிச்சைப் பழத்தில் சிறிதளவு தேன் விட்டு, மூட்டுப் பகுதியில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, 15-30 நிமிடங்கள் அப்படியேவிட வேண்டும். பின்னர், தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். தேன் அதிக அளவு சேர்த்து, தினமும் மசாஜ் செய்தால், விரைவில் கருமை மறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்த விஷயம் பற்றி பெண்களின் அதிர்ச்சியூட்டும் கருத்துகள்..!! (வீடியோ)
Next post இமயமலையே இடிந்தாலும், பரங்கிமலையே பறந்தாலும்…?..!!