உடலுறவுக்கான தனிப்பட்ட வழவழப்புப் பொருள்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்..!!

Read Time:8 Minute, 51 Second

1. நீர் சார்ந்த வழவழப்புப் பொருள்கள் (Water-Based Lubricants)

மிகவும் பொதுவாக விற்பனையாகும் வழவழப்புப் பொருள்கள் நீர் சார்ந்த தயாரிப்புகளே ஆகும். இவை கிளிசரின் அல்லது கிளிசரின் அல்லாத பொருள்களால் தயாரிக்கப்பட்டிருக்கலாம். கிளிசரின் வழவழப்புப் பொருளுக்கு இனிப்பு சுவையை அளிக்கிறது. சுவையுள்ள, வெதுவெதுப்பான வழவழப்புப் பொருள்களில் பெரும்பாலும் கிளிசரின் இருக்கும். பெண்ணுறுப்பில் மீண்டும் மீண்டும் யீஸ்ட் நோய்த்தொற்று ஏற்படும் பெண்கள், கிளிசரின் அற்ற வழவழப்புப் பொருள்களைப் பயன்படுத்தலாம்.

நன்மைகள் (Advantages)

இவை எளிதில் கிடைக்கக்கூடியவை, கறை ஏற்படுத்தாதவை மற்றும் மலிவானவை
லேட்டக்ஸ் ஆணுறைகள் மற்றும் டயஃப்ரம்களுடன் இவற்றைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது, மேலும் இவை சுய இன்பம், இயல்பான உடலுறவு, குதவழி உடலுறவு என எல்லா விதமான பாலியல் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தக்கூடியவை.

சிலிக்கான் செக்ஸ் டாய்சுடனும் இவற்றைப் பயன்படுத்தலாம்
இவற்றைப் பயன்படுத்திய பிறகு கழுவுவதும் எளிது, கழுவிய பிறகு சருமம் மீண்டும் சுத்தமாக இருக்கும்.
இவை உலர்ந்தால், சிறிது நீர் சேர்த்தால் மீண்டும் அவை வழவழப்பாகிவிடும்.

பல பிராண்டுகள் குறைந்த உப்புச் செறிவுடன் பெண்ணுறுப்பில் சுரக்கும் திரவங்களுடன் இணக்கமாக இருக்கும் பண்புடன் தயாரிக்கப்படுகின்றன, ஆகவே இவற்றைப் பயன்படுத்துவது வாய்வழிப் புணர்ச்சிக்கும் எவ்விதக் குறுக்கீடும் ஏற்படுத்தாது.
கிளிசரின் இல்லாத வழவழப்புப் பொருள்கள் நீண்ட நேரம் பலனளிக்கும், இனப்பெருக்க உறுப்புகளில் குறைந்த எரிச்சலையே ஏற்படுத்தும்.
குறைபாடுகள் (Disadvantages)

இவை விரைவில் உலர்ந்துவிடலாம், சில சமயம் ஒட்டும் தன்மை கொண்டிருக்கலாம், பிசிபிசுப்பாக இருக்கலாம்.
செயற்கை கிளிசரின் பெண்களுக்கு யீஸ்ட் நோய்த்தொற்று ஏற்படுத்தக் காரணமாகலாம்.
2. எண்ணெய் சார்ந்த வழவழப்புப் பொருள்கள் (Oil-based lubricants)

இவை இயற்கை எண்ணெய்கள் அல்லது செயற்கை எண்ணெய்களைக் கொண்டு தயாரிக்கப்படலாம், இவை நீர் சார்ந்த வழவழப்புப் பொருள்களை விட அதிக நேரம் நீடிக்கும். இவை கெட்டியாகவும் கிரீம் போன்ற பதத்திலும் இருக்கும்.

எடுத்துக்காட்டுகள் (Examples):

இயற்கை எண்ணெய் சார்ந்த வழவழப்புப் பொருள்கள்: காய்கறி, சோளம், வெண்ணெய்ப்பழம், வேர்க்கடலை மற்றும் ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் போன்றவை
செயற்கை எண்ணெய் சார்ந்த வழவழப்புப் பொருள்கள்: மினரல் எண்ணெய், வாசலின், பாடி லோஷன்கள், கிரீம்கள் போன்றவை

நன்மைகள் (Advantages)

இனப்பெருக்க உறுப்புகளை மசாஜ் செய்துவிடவும் சுய இன்பம் செய்துகொள்ளவும் ஏற்றவை
இந்த இயற்கை எண்ணெய்கள் சுத்தமாக இருந்தால், பெண்ணுறுப்பில் பயன்படுத்த இவை பாதுகாப்பானவை
உட்கொண்டாலும் பாதிப்பில்லை
எல்லா வகையான பாலியல் செயல்பாடுகளுக்கும் ஏற்றது
மலிவானது மற்றும் எளிதில் கிடைப்பது
குறைபாடுகள் (Disadvantages)

லேட்டக்ஸ் ஆணுறைகளை அழிக்கிறது
ஆடைகளில் கறை ஏற்படுத்தும்
செயற்கை எண்ணெய் சார்ந்த வழவழப்புப் பொருள்கள் பெண்ணுறுப்பு இதழ் பகுதிகளில் எரிச்சலை ஏற்படுத்தலாம்
3. சிலிகான் சார்ந்த வழவழப்புப் பொருள்கள் (Silicone Based Lubricants)

இவை சிலிக்கான் சார்ந்த தயாரிப்புகளாகும், இவற்றில் சிலிக்கான் உள்ளது, இவை மார்பக மாற்று அறுவை சிகிச்சையில் பொருத்தப்படும் சிலிக்கானில் இருந்து வேறுபட்டவை, இவை பாதுகாப்பானவை, சருமத்திற்குள்ளும் செல்லாது. இவை மற்ற எல்லா வகை வழவழப்புப் பொருள்களையும்விட நீண்ட நேரம் பலனளிப்பவை, குறிப்பாக நாள்பட்ட பிறப்புறுப்பு வலி உள்ள பெண்களுக்கு இவை மிகவும் பயனுள்ளவை.

நன்மைகள் (Advantages)

லேட்டக்ஸ் ஆணுறைகளுடன் இவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம், இவை மணமற்றவை மற்றும் சுவையற்றவை
இவற்றில் பதப்படுத்தும் செயற்கை வேதிப்பொருள்கள் இல்லை, சருமத்திற்கும் ஏற்றவை சருமத்திற்கு ஈரப்பதமளிக்கின்றன.

நீர் சார்ந்த வழவழப்புப் பொருள்களைவிட இவை நீண்ட நேரம் நீடிப்பவை.
சருமத்திற்கு மென்மையான, மிருதுவான உணர்வளிப்பவை.
குறைபாடுகள் (Disadvantages)

இவை விலை அதிகமானவை, கிடைப்பதும் கடினம் (இவற்றில் பெரும்பாலானவை ஆன்லைனில் கிடைக்கும் அல்லது பெரியவர்களுக்கு மட்டுமே மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளில் மட்டுமே கிடைக்கும்)
இவற்றை சிலிக்கான் அல்லது சைபர்ஸ்கின்னால் தயாரிக்கப்பட்ட செக்ஸ் டாய்சுடன் பயன்படுத்த முடியாது.
அதிகமாகப் பயன்படுத்தினால், சோப்பு போட்டு நீரால் கழுவினால் மட்டுமே முற்றிலுமாகப் போகும்.
4. பெட்ரோலியம் சார்ந்த வழவழப்புப் பொருள்கள் (Petroleum-based Lubricants)

இவை பெட்ரோலியம் காய்ச்சி வடித்தல் முறையில் பெறப்படும் தயாரிப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டு: வாசலின் (பெட்ரோலியம் ஜெல்லி)

பெட்ரோலியம் சார்ந்த தயாரிப்புகளைத் தவிர்ப்பது நல்லது
இவை பெண்ணுறுப்பின் pH அளவை மாற்றுவதன் மூலம் பெண்ணுறுப்பில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும், மேலும் அவற்றைக் கழுவுவதும் கடினம்

pH மாறினால் அது யீஸ்ட் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கலாம்
இவை லேட்டக்ஸ் ஆணுறைகள் மீள்தன்மை இழக்கப்படுவதால் கிழியும் வாய்ப்பும் நழுவும் வாய்ப்பும் அதிகரிக்கலாம்.

தனிப்பட்ட லூப்ரிகண்டுகள் பாலியல் காலத்தில் வறட்சி மற்றும் அசௌகரியத்தை தடுக்க உதவும் மிகவும் பயனுள்ள தயாரிப்புகளாகும். இவை சுய இன்பத்தின்போதும் உடலுறவின்போதும் பிற பாலியல் செயல்பாடுகளின்போதும் இன்ப உணர்வை அதிகரிக்கின்றன. வீட்டிலுள்ள பல பொருள்களும் பொதுவாக வழவழப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் முன்பு அவை பாதுகாப்பானவையா என்று பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம். கடைகளிலும் ஆன்லைனிலும் பல்வேறு வகையான வழவழப்புப் பொருள்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன, ஒவ்வொரு வகையின் நன்மைகளையும் குறைபாடுகளையும் சீர்தூக்கிப் பார்த்து, உங்களுக்கு ஏற்ற ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 90களில் கலக்கிய கவர்ச்சி நடிகை விசித்ராவா இப்படி- ஆளே மாறிய நடிகை..!! (வீடியோ)
Next post பெண்களுக்கு வரும் ஸ்ட்ரெச் மார்க்கை தடுப்பது எளிது..!!