வில்லன் வேடம்தான் வெளியே தெரிய வைக்கும்: மதுபானக்கடை ரவி..!!

Read Time:3 Minute, 1 Second

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து நல்ல பெயர் வாங்குவது எளிது. குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பேர் வாங்குவது ரொம்பவும் கஷ்டம். அந்த வகையில், சமீபகாலமாக குணச்சித்திர வேடத்தில் நடித்து கைதட்டல் வாங்கி வருகிறார் ரவி. மதுபானக்கடை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்ததால் மதுபானக்கடை ரவி என்றால் கோடம்பாக்கம் முழுக்க தெரிகிறது. ஆரம்பத்தில் காமதேனு மசாலா என்ற பெயரில் மசாலா பாக்கெட் தொழிலில் ஈடுபட்டிருந்த ரவி இன்று சினிமாவில் மசாலா காதாபாத்திரங்களில் திறமை காட்டி வருகிறார்.

சீரியல் முதல் சினிமா வரைக்கும் இரட்டைக்குதிரையில் பறந்து கொண்டிருக்கும் ரவி சினிமாவில் ஜெயித்த கதையை கூறினார்.

”சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு கோமல் சுவாமிநாதன் நாடகங்களில் நடித்து வந்தேன். சங்கீத பைத்தியங்கள், இருட்டில் தேடாதீர்கள், போன்ற நாடகங்கள் முக்கியமானது. இன்னமும் கூட தண்ணீர் தண்ணீர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த அனுபவத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடத்தொடங்கினேன். அப்போது ராதிகா டிவி சீரியல் என்னை எடுத்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து பல தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன். பிறகு மதுபானக்கடை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படம் எனக்கு அடையளத்தைக் கொடுத்தது.

தொடர்ந்து பாஸ் எ பாஸ்கரன், காதல் சொல்ல வந்தேன், ஹரிதாஸ், சண்டியர், இசை, சண்டமாருதம், சண்டிவீரன், கட்டப்பாவக்காணோம், அரிமாநம்பி, கபாலி, பங்களில் நடித்தேன். தற்போது சண்டைகோழி 2, வண்டி போன்ற படங்களில் நடித்து வருகிறேன். இதில் வண்டி படம் வித்தியாசமான கதைக்களம் கொண்டது. கவனிக்கூடிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. இதில் வில்லன் பாத்திரம் கூட விதிவிலக்கல்ல. சினிமாவில் நெகடிவ் கதாபாத்திரங்கள்தான் ரசிகர்கள் மனதில் முதல் பதிவாகிறது. அதனால் வில்லன் கதாபாத்திரம் நடிப்பதில் லாபம்தான் என்றார் மதுபானக்கடை ரவி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரசிகர்களை மரண மட்டையாக்கும் சிம்பு- ஓவியா..!!
Next post ஐ.நா வாக்கெடுப்பு: மாறுபட்டுப்போகும் வெளிவிவகாரக் கொள்கைகள்..!! (கட்டுரை)