சமையலுக்கு பாமாயில் உபயோகித்தால் ஏற்படும் பாதிப்புகள்..!!

Read Time:2 Minute, 25 Second

சமையலுக்கு அத்தியாவசியமான உபபொருள் எண்ணெய். முன்பெல்லாம் செக்கில் ஆட்டிய எண்ணெயை தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று விலை குறைவாக கிடைக்கிறது என்று பாமாயிலை அதிகம் உபயோகிக்க தொடங்கிவிட்டனர். இந்த பாமாயில் உடலுக்கு எந்த மாதிரியான நன்மை, தீமைகளை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்ளலாம்!

பாமாயிலில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பதால் இதய நோய் உள்ளவர்கள் இதை தொடவே கூடாது.

அதே போல் உடல் பருமன் உள்ளவர்கள் பாமாயில் சாப்பிட்டால் உடல் எடை இன்னும் கூடும். அதனால் பாமாயிலை சாப்பிடாதீர்கள்!

வளர்சிதை நோயை ஏற்படுத்துவதில் பாமாயில் உள்ள கொழுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் வளர்சிதை நோய் உள்ளவர்கள் பாமாயிலை சேர்த்து சாப்பிடக்கூடாது.

பாமாயிலை உணவில் சேர்த்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் செய்யும்.

பாமாயிலும் கொழுப்பு சத்து என்பதால் அதிக கொழுப்பு சத்து உள்ளவர்கள் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பாமாயிலின் நன்மைகள் என்று பார்த்தோமானால் புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் படைத்தவை.

பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வை திறனை அதிகரிக்க செய்யும்.

அதே போல் இந்த பீட்டா கரோட்டின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாமாயிலில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது என்பதால், இளமை தோற்றத்தை தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலுக்கு தேவையான விட்டமின் ஏ பாமாயிலில் உள்ளது. விட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்கள் பாமாயிலை உபயோகிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினிக்கு கடல் கடந்து வந்த முதல் வாழ்த்து செய்தி – அனுப்பியவர் யார் தெரியுமா?..!!
Next post 47 ஆண்டுகள் காதலியின் பரிசை பிரிக்காமல் காத்திருக்கும் காதலன்..!!