நயன்தாராவை புகழ்ந்து தள்ளிய ஷரத்தா ஸ்ரீநாத்..!!

Read Time:1 Minute, 52 Second

‘விக்ரம் வேதா’, ‘ரிச்சி’ படங்களில் நடித்த பிறகு தமிழ் பட உலகில் பேசப்படும் நடிகையாகி இருப்பவர் ‌ஷரத்தா ஸ்ரீநாத். அவர் தனது அனுபவம் பற்றி கூறுகிறார்….

“நான் முதலில் மலையாளத்தில் அறிமுகமானேன். பின்னர் கன்னடத்தில் ‘யுடர்ன்’ படத்தில் நடித்தேன். அடுத்து மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘விக்ரம் வேதா’வில் நடித்த பிறகு தான் நல்ல பெயர் கிடைத்தது. எல்லோருக்கும் என்னை தெரியவந்தது. 2017 உண்மையாகவே நல்ல ஆண்டாக அமைந்தது.

இப்போது தெலுங்கில் 2 படங்கள், தமிழில் விஷாலுடன் ஒரு படம் நடிக்கிறேன். தமிழில் என் முதல் படம் நிவின்பாலியுடன் நடித்த ‘ரிச்சி’. மாதவன் விஜய்சேதுபதியுடன் ‘விக்ரம்வேதா’ படத்தில் நடித்தது புதிய அனுபவம். விஜய்சேதுபதி கடின உழைப்பாளி. நான் மாதவனின் ரசிகை. இரண்டு பேருமே நடிப்பில் திறமைசாலிகள்.

எனது ரோல் மாடல் நயன்தாரா. இவர் பணம், புகழை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றவர். நடிப்புக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்தவர். முழு படத்தையும் நாயகியால் கொண்டு போக முடியும் என்று ‘அறம்’ படத்தில் நிரூபித்தவர்.

நான் நடிக்கும் பாத்திரங்கள் மக்களை போய் சேர வேண்டும். எனக்கு பிடிக்கும் படங்களில் நடிப்பேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய ஆண்டின் அரசியல்..!! (கட்டுரை)
Next post ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா..!! (வீடியோ)