திரையுலக பயணத்தில் 2017 முக்கியமான ஆண்டு – காஜல் அகர்வால்..!!
தமிழ், தெலுங்கு திரை உலகில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய இடம் பிடித்து இருப்பவர் காஜல் அகர்வால்.
2017-ம் ஆண்டு தனக்கு எப்படி அமைந்தது என்பது குறித்து காஜல் இப்படி கூறுகிறார்….
“2017-ம் ஆண்டு எனக்கு நம்பிக்கை கொடுத்த வெற்றிகரமான வருடமாக அமைந்தது. தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நான் நடிப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. அந்த வாய்ப்பு ‘கைதி எண்150’ படத்தில் கிடைத்தது. இதையடுத்து ராணாவுடன் ‘நேனா ராஜு நேனே மந்திரி, படத்தில் நடித்தேன்.
தமிழில் அஜித்துடன் ‘விவேகம்’ விஜய்யின் ‘மெர்சல்’ படங்களில் நடித்தேன். இப்படி ஒரே ஆண்டில் பல பிரபல ஸ்டார்களுடன் நடித்தேன்.
இந்த படங்கள் கொடுத்த வெற்றி காரணமாகத்தான் இப்போது, ‘பாரிஸ் பாரிஸ்’, ‘அவே’ படங்களில் நடிக்கிறேன். அந்த வகையில் 2017-ம் ஆண்டு எனது திரை உலக பயணத்தில் மிகவும் நம்பிக்கை கொடுத்த வெற்றிகரமான முக்கியமான ஆண்டாக அமைந்து விட்டது”.
Average Rating