By 5 January 2018 0 Comments

இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் ஏற்படும் பாதிப்புகள்..!!

நமது உடலில் சுற்றோட்ட அமைப்பு சிறிது நேரம் கூட ஓய்வு எடுப்பதில்லை. ஒவ்வொரு நொடியும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஏதோ ஒரு அடிபடும் பொழுதோ ரத்தம் வெளியேறும் பொழுதோ, ரத்தம் ஏற்ற வேண்டிய நிலை வரும் பொழுதோ மட்டுமே அதற்கு அக்கறை காட்டப்படுகின்றது. 5-6 லி ரத்தம் நம் உடல் முழுவதும் சுற்றிக் கொண்டே இருக்கும். இந்த ரத்த ஓட்டம் தான்.

* ஆக்ஸிஜனை செல்களுக்கும், சதைகளுக்கும் அளிக்கின்றது.

* செல்களுக்கு அமினோ அமிலம், க்ளூகோஸ் மற்றும் பல சத்துகளை அளிக்கின்றது.

* கழிவு, கார்பன்டை ஆக்ஸைடு, லக்டிக் ஆசிட், யூரியா இவற்றினை நீக்குகின்றது.

* உடலினை நோயிலிருந்து காக்கின்றது.

* ஹார்மோன்களை எடுத்துச் செல்கின்றது.

* அமிலத்தன்மையினையும், உடல் உஷ்ணத்தினையும் சீராய் காக்கின்றது.

* ப்ளேட்லெட்ஸ்-ரத்தம் இறுக உதவும்.

சிகப்பு அணுக்கள்-ஆக்ஸிஜன் எடுத்து கார்பன்டை ஆக்ஸைடு நீக்குகின்றது. ஹைட்ரஜன் மூலம் றிபி அளவினை சீராய் வைக்கின்றது.

வெள்ளை அணுக்கள்-கிருமிகளுடன் போராடுகின்றது.

ப்ளாஸ்மா-ரத்தத்தின் 50 சதவீதம் இது. கார்பன்டை ஆக்ஸைட், க்ளூகோஸ், ஹார்மோன்கள், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகளை சுமந்து செல்வதே இதுதான்.

இப்படி ஒரு மாபெரும் வேலை நம் உடலினுள் இயங்கிக் கொண்டே இருக்கின்றது.

இந்த ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் ஏற்படும் பாதிப்புகளை பார்ப்போமா?

* மூளை செயல் திறன் குறையும்: 15-20 சதவீத ரத்த ஓட்டம் மூளைக்கே தேவைப்படும். இது குறைந்தால் மறதி, ஓருங்கிணைப்பில் சிரமம் போன்றவை ஏற்படும். பேச்சில் தடுமாற்றம் இருக்கும்.

பொதுவில் முறையான உடற்பயிற்சி செய்யும் போது ரத்த ஓட்டம் சீராக இருக்கின்றது.

* கை கால்கள் சில்லிப்பு: உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் கை, கால்களில் சில்லிப்பு, மரத்து போதல் ஏற்படும். காயங்கள் ஆற கூடுதல் காலம் ஆகும். எளிதில் உடையும் நகம், நிறம் மாறிய சருமம் இவை அறிகுறிகளாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இவ்வாறு குறைந்த ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படலாம்.

* சோர்வு: நாம் எப்படி சாப்பிடாவிட்டால் சோர்ந்து விடுவோமோ, உடலில் மிக நுண்ணிய அளவில் செல்களுக்கு தேவையான அளவு சத்தும், ஆக்ஸிஜனும் கிடைக்கவில்லை என்றால் அவைகளால் செயல்பட இயலாது. சோர்ந்த தசைகள், மூச்சு வாங்குதல், அதிக சோர்வு இவை அதன் அறிகுறிகளாகத் தெரியும்.

* பசியின்மை: ரத்த ஓட்டம் சீராய் இல்லை என்றால் சீரண மண்டலம் பாதிக்கப்படும். கல்லீரல் ரத்தத்தினை சுத்திகரிக்கும். ரத்தத்தில் உள்ள சக்தியினையும் எடுத்துக் கொள்ளும். எடை குறைதல், பசியின்மை இவை சீரான ரத்த ஓட்டமின்மையின் பாதிப்பாக இருக்கலாம்.

* நரம்பு வீக்க நோய்: இந்த பாதிப்பு சரியில்லாத இரத்த ஓட்டத்தின் அறிகுறி. இந்த ரத்த குழாய்களில் இருக்கும் வால்வுகள் வலுவிழக்கின்றன. இதனால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படலாம். சரி இந்த பாதிப்புகளை எப்படி தவிர்ப்பது. நல்ல உடற்பயிற்சியும், ஓர் இடத்திலேயே அமர்ந்து இல்லாமல் நடந்து கொண்டே இருப்பதும் முதல் தீர்வாக அமையும்.

தினமும் சிறிய அளவு சில கொட்டைகளை சாப்பிடுவது ஆரோக்கியம் தரும். ஆயுளை நீட்டிக்கும். இது இன்று அதிகமாக பேசப்படும் வார்த்தைகள். இந்த சிறிய கொட்டைகளுக்கு அப்படி என்னதான் முக்கியத்துவம் உள்ளது. இவற்றில் மிக அதிக அளவு ‘ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்’ உள்ளது. இவை கெட்ட கொழுப்பினை குறைப்பது மட்டுமல்ல. புற்றுநோய், சர்க்கரை நோய், இருதய நோய் இவற்றின் பாதிப்பினை வெகுவாய் குறைக்கின்றன. பல கொட்டைகள் பூரித கொழுப்பு உடையதாக இருந்தாலும் கீழ் கூறப்படும் கொட்டைகள் நல்ல ஒற்றை அபரி மிதமான கொழுப்பு உடையதாகவும், நல்ல வைட்டமின்கள், தாது உப்புக்கள் கொண்டதாகவும் உள்ளது.

பாதாம்: பாதாம் கொட்டைக்கு எப்பொழுதும் மிக உயர்ந்த இடம் உண்டு. இதில் உள்ள அபரிமித வைட்டமின் ஈ, கால்ஷியம், மக்னீசியம், நார்சத்து, ரிபோப்ளேவின், இரும்பு சத்து இவை எண்ணற்ற நன்மைகளை உடலுக்குத் தருகின்றது. இந்த கொட்டை சர்க்கரை நோயினால் ஏற்படும் வீக்கத்தினை குறைக்கின்றது.

பிஸ்தா: இது உடலுக்கு நல்ல கொழுப்பினைத் தருகின்றது. உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கின்றது. இருதய நோய் ஏற்படும் வாய்ப்பினை வெகுவாய் குறைக்கின்றது.

இதில் மக்னீசியம், காப்பர், வைட்டமின் பி6 இவை இருக்கின்றன. ரத்தத்தில் திடீர் என உணவுக்குப்பின் சர்க்கரை அதிகம் உயர்வதனை இது தடுக்கின்றது.

வால்நட்: வாதுமை கொட்டை என தமிழில் கூறப்படுகின்றது. இதில் ஓமேகா 3, ஏ.எல்.ஏ. போன்றவை கெட்ட கொழுப்பினை குறைக்கின்றது. உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கின்றது. இருதய பாதிப்பினை குறைக்கின்றது. உடலில் வீக்கத்தினை குறைக்கின்றது. மூளை செயல் திறன் கூடுகின்றது.

முந்திரி: முந்திரி கொட்டையில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட், இரும்பு, காப்பர், மக்னீசிய சத்து இருக்கின்றது. சிறு அளவில் எடுத்துக் கொள்வது பல நோய்களை தவிர்ப்பதாக இருக்கும். மற்றும்

* குளிர்ந்த நீரில் குளித்தல், * சிறிதளவு அடர்ந்த சாக்லேட் எடுத்துக் கொள்ளுதல், * நல்ல அளவான எடை பராமரித்தல், * மசாஜ், * சிகரெட் தவிர்த்தல்.

இவையும் நல்ல சீரான ரத்த ஓட்டத்தினை அளிக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam