இலங்கையில் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் சீருடை அணிவதை கட்டாயப்படுத்த உத்தரவு

Read Time:2 Minute, 12 Second

ஆகஸ்ட் மாதம் முதல் அமுலாகும் வகையில் மேல் மாகாணத்தில் இயங்கும் சகல தனியார் பஸ்களிலும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் சீருடை அணிவதை கட்டாயப்படுத்துமாறு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் டிக்கெட் விநியோகிக்கும் இயந்திரம் பாவிப்பதை கட்டாயப்படுத்துமாறும் உத்தரவிட்டது. சுற்றாடல் மன்றம் தாக்கல் செய்திருந்த நீதியரசர் அடங்கலான நீதியரசர்குழு நேற்று இந்த உத்தரவை வழங்கியது. குழல் மாசடைதலை தடுக்க சட்டங்கள் உள்ள போதும் கொழும்பில் சூழல் மாசடைவதைத் தடுக்க சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுக்காததற்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. டிக்கட் விநியோக இயந்திரங்கள் கொள்வனவு செய்ய பஸ் உரிமையாளர்களுக்கு நிதி வழங்குமாறும் நீதிமன்றம் பணித்தது. தேசிய போக்குவரத்து அதிகாரசபையின் வழிகாட்டலின் கீழ் இந்த நடைமுறையை செயற்படுத்துமாறும் நீதிமன்றம் தெரிவித்தது. தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, தேசிய போக்குவரத்து அதிகாரசபை என்பவற்றின் பிரதிநிதிகளும் நேற்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். ஆய்வுகளின்படி இலங்கையில் பாவிக்கும் வாகனங்களில் 48வீதமான வாகனங்களில் புகைபோக்கிகள் பழுதடைந்தவை எனவும் இதனால் வெளியாகும் கரும் புகையினால் சூழல் மாசடைவதாகவும் தேசிய போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்..
Next post அணுஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக்கப்பலில் இளவரசர் வில்லியம்