பேருந்தில் இடம் கிடைக்காமல் நின்ற கர்ப்பிணி… விபத்தில் பலி ..!!

Read Time:2 Minute, 36 Second

கேரளாவின் கோட்டயம் பகுதியை சேர்ந்த நஷிதா என்ற 8 மாத கர்ப்பிணி, பேருந்தில் இருந்து வெளியே விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் அஞ்குள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.34 வயதான நஷிதா, 8 மாதங்கள் கர்ப்பமாக இருந்தார். தனது மகள் மற்றும் சகோதரியுடன் ஒரு தனியார் பேருந்தில் எறிய போது, கூட்டத்தில் இடம் கிடைக்காமல் நின்று சென்றுள்ளார். திடீரென பேருந்து ஒரு இடத்தில் வேகமாக திரும்பிய போது, நிலை தடுமாறி நஷிதா வெளியே தூக்கி ஏறியப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நஷிதா. ஆபத்தாக வண்டி ஓட்டியதற்காக பேருந்து ஓட்டுநர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய நஷிதாவின் கணவர், “அத்தனை பேர் இருந்த பேருந்தில் ஒருவர் கூட என் மனைவி உட்கார இடம் கொடுக்க முன்வரவில்லை. அதில் இருந்த ஒரு பெண் தனது இடத்தை கொடுத்திருந்தால் கூட என் மனைவி உயிரிழந்திருக்க மாட்டார். எங்களை போன்ற ஏழைகள் தான் பேருந்தில் செல்கிறோம். ஆனால், போதிய பாதுகாப்பு இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

நஷிதா இறந்தபோது, பேருந்தில் அவருடன் பயணம் செய்த அவரது சகோதரி ஷனிதா, “என் அருகே தான் நின்று கொண்டிருந்தார். எல்லோரும் கதறும் சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்தால், ரோட்டில் ரத்த வெள்ளத்தில் நஷிதா இருந்தார். இதற்கெல்லாம் காரணம் பேருந்தின் நடத்துனரும், ஓட்டுனரும் கதவை மூடாமல் விட்டது தான். அதை ஒழுங்காக மூடியிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது” என்றார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹர ஹர மகாதேவகி: திருமணத்தில் மொத்தக் குடும்பமும் அரங்கேற்றிய நடனம்..!! (வீடியோ)
Next post ரஜினிக்கு சிறப்பு விருந்தளித்த மலேசிய பிரதமர்..!!