புதிய முயற்சியை கையாண்ட ஜுங்கா இயக்குனர்..!!

Read Time:2 Minute, 3 Second

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘ஜுங்கா’ படத்தின் டீசர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் கலையரங்கில் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் வெளியிடப்பட்டது.

இப்படத்தில் விஜய் சேதுபதி முற்றிலும் புதிய கெட்டப்பில் தோன்றுகிறார். இவருடன் சயீஷா சைகல், யோகி பாபு போன்றவர்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சித்தார்த் விப்பின் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கோகுல்.

இதைப் பற்றி இயக்குநர் கோகுலிடம் கேட்ட போது, ‘படத்தின் டைட்டிலுக்காக டீசர் வெளியிடப்பட்டது இது தான் முதன்முறை. ‘ஜுங்கா’ என்ற டைட்டில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வைக்க எடுக்கப்பட்ட புதிய முயற்சி இது. விஜய் சேதுபதியின் திரையுலக பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த டீசரில் அவரின் உடல்மொழி மற்றும் தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவரும் என்று நினைக்கிறோம்.’ என்றார்.

இந்த டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளைப் பெற்று, ‘ஜுங்கா’வைப் பற்றிய எதிர்பார்ப்பினை எகிற வைத்திருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பந்தயத்தில் குதிரை..!! (கட்டுரை)
Next post புதுப்பெண் அனுஷ்கா திருமணத்திற்கு பின் ரோட்டில் செய்த காரியத்தை பாருங்கள்..!! (வீடியோ)