ரசிகர்களுக்கு ‘ட்ரிபிள் டிரீட்’ கொடுக்கும் சூர்யா..!!

Read Time:1 Minute, 30 Second

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.

சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், சூர்யாவின் அடுத்த பட அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. சூர்யாவின் 37வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்க இருக்கிறார். ஏற்கனவே கே.வி.ஆனந்த் சூர்யாவை வைத்து ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படத்தை இயக்கியவர்.

சூர்யாவின் 38-வது படத்தை ‘24’ படத்தை இயக்கிய விக்ரம் குமாரும், 39-வது படத்தை ‘சிங்கம்’ படத்தை இயக்கிய ஹரி இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுப்பெண் அனுஷ்கா திருமணத்திற்கு பின் ரோட்டில் செய்த காரியத்தை பாருங்கள்..!! (வீடியோ)
Next post மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கணவன்…… அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்..!! (வீடியோ)