நட்சத்திர விழாவில் நடிகர் ஆரிக்கு பலத்த காயம்..!!

Read Time:1 Minute, 48 Second

நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் மலேசிய பிரதமர் முன்னிலையில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்ட அனைத்து திரையுலக நட்சத்திரங்கள் ஒன்று கூடி நட்சத்திர விழாவை நேற்று நடத்தினார்கள். இவ்விழாவில் நிகழ்ச்சியின் நிறைவாக மாலையில் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் உடன் மலேசிய கலைஞர்கள் இணைந்து நடிகர் ஆர்யா தலைமையில் ஒரு அணியும் அதர்வா தலைமையிலான கால்பந்து அணியும் பங்குபெறும் கால்பந்து போட்டி நடைபெற்றது.

இதில் அதர்வா அணி சார்பாக விளையாடிய நடிகர் ஆரி, தன் அணிக்கு வலு சேர்க்கும் விதமாக கோல் போடும் முயற்சியில் ஈடுபட்ட போது, எதிரணியின் கால்பந்து வீரர் பந்தை தடுக்கும் நிலையில், எதிர்பாராதவிதமாக ஆரி மீது விழுந்ததால், அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

விறுவிறுப்பாகச் சென்ற ஆட்டக்களத்தில் பதட்டம் நிலவியது. தொடர்ந்து விளையாடுவார் என எதிர்ப்பார்த்த ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. காலில் ஏற்பட்ட பெருத்த காயத்தின் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் ஆரி வெளியேறினார். இதற்காக தற்போது அவருக்கு மலேசியாவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கணவன்…… அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்..!! (வீடியோ)
Next post உடல் பருமன் ஏற்படுவது ஏன்?..!!