நானும் அரசியலில் களமிறங்க இருக்கிறேன்: பாக்யராஜ்..!!

Read Time:1 Minute, 39 Second

திரைப்பட இயக்குநர், நடிகர் பாக்யராஜ் பிறந்த நாள் விழா அவரது ரசிகர்கள் சார்பில் மதுரையில் உள்ள தனியார் ஒட்டலில் நடந்தது. விழா முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரஜினி, கமல் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., தன் படங்களில் சமூகத்திற்கு தேவையான அரசியல் கருத்துக்களை புகுத்தினார். சகதொழிலாளிகளுக்கும், மக்களுக்கும் நல்லது செய்தார்.

ஆனால் தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழும். இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

தேர்தல் மன்னன் பத்மராஜன் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுவது இல்லை. எனவே மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

எம்.ஜி.ஆர். புகழை காப்பாற்ற அ.தி.மு.க.- தினகரன் அணிகள் ஒன்றாக இணைய வேண்டும். எனக்குள்ளும் அரசியல் மீதான ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நான் நேரடி அரசியலில் பங்கேற்பது குறித்து அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த குடும்ப குத்து விளக்கு செய்யும் வேலையை பாருங்க..!! (வீடியோ)
Next post 2 கோடி பேர் பார்த்த வீடியோ அப்படி என்ன தான் இருக்கு நீங்களே பாருங்கள்..!! (வீடியோ)