நாச்சியார் படத்துக்கு தேதி குறித்த பாலா…!!

Read Time:1 Minute, 43 Second

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பி ஸ்டூடியோஸ் மூலம் பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’.

ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜோதிகா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார்.

நாச்சியார் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ஏகோபத்திய வரவேற்பை பெற்ற நிலையில், டீசரின் முடிவில் ஜோதிகா பேசம் கெட்ட வார்த்தையால் படம் சர்ச்சையிலும் சிக்கியது. இதையடுத்து படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிக்கிம் மாநிலத்துக்கு தூதராவதில் பெருமை – ஏ.ஆர்.ரகுமான்…!!
Next post மூத்த கலைஞர்களுக்கு மரியாதை அளிக்கவில்லை: எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டுக்கு விஷால் பதில்…!!