ஐக்கிய அமெரிக்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹாரி முடிவு…!!
ஐக்கிய அமெரிக்க சட்டமன்றத்தின் கீழவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹாரி அரோரா அறிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹாரி முடிவு
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஹாரி அரோரா என்பவர் அந்நாட்டு சட்டமன்றத்தின் கீழவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் குடியரசுக்கட்சி சார்பாக கனெக்டிகட் மாகாணத்தின் 4 வது மாவட்டத்தில் போட்டியிட உள்ளார். இத்தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பிரதிநிதியாக உள்ள ஜிம் கீம்சிற்கு எதிராக போட்டியிடுகிறார்.
இப்பகுதியில் குடியரசுக்கட்சி சார்பாக போட்டியிடும் முதல் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதிநிதிகள் உறுப்பினரின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகும். இவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது குறித்து பேசிய ஹாரி, ‘மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். இது என் கடமையாகும். தொழிலில் வெற்றியடைந்த பிறகு அரசியலில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறேன்’ என கூறினார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுடன் சேர்ந்து, பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மூன்று இந்தியர்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating