By 25 January 2018 0 Comments

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனத்திற்கு…!!

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய தினசரி வழிமுறைகள் சிலவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்..

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனத்திற்கு…
சிறந்த நடைமுறை ஒழுங்கு, நமது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் மன அழுத்தத்தைக்குறைக்கும். மன அழுத்தம் குறையும் போது உடல் எடை தானே குறையும். ஆயுர்வேத வாழ்வியல் முறைப்படி தினசரியா “வாழ்வியல் நடைமுறைகளை” ஒழுங்காகக் கடைப்பிடிப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. ஒவ்வொரு தனி மனிதரும் இதைப்பின்பற்ற வேண்டுமென ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் பின்பற்ற வேண்டிய தினசரி நியமங்கள் சிலவற்றைக் காண்போம்.

மாலை 6 மணி முதல் 10 மணி வரை கபத்தின் வேளை. அப்போது எல்லா செயல்பாடுகளுமே மெதுவாகவும், மந்தமாகவும் இருக்கும். நமது உடல் தூங்குவதற்கு தன்னை ஆயத்தமாக்கிக் கொள்ள உகந்த நேரம். நிறைய மனிதர்கள் இந்த நேரத்தில் சோம்பலாக சக்தி குறைந்து காணப்படுவர். இந்த நேரத்திற்குள் நாம் தூங்க ஏற்படாவிட்டால் பிறகு தூங்குவது கடினம். மிகவும் நேரம் கடந்து விடும். இயற்கையோடு இணைந்து நல்ல தூக்கமும் ஓய்வும் பெற வேண்டுமானால் சீக்கிரம் தூங்குவது நல்லது.

காலையில் 6 மணி – 10 மணி வரை கபத்தின் வேளை. அப்போது அதிக சக்தியும், தெம்பும் கிடைக்கும் நேரம். அந்த நேரத்தில் நாம் விழிப்புடன் இல்லாவிட்டால் சோம்பலாகி, எல்லாவற்றிலும் பின்தங்கி விடுவோம். ஆகவே 6 மணிக்குள் எழுவது நல்லது. எழுவதோடு நிற்காமல் விழிப்புடனும், சுறுசுறுப்புடனும் இருந்தால் தான் உடலின் செரிமானம் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றுக்கு உறுதுணை ஆக முடியும். எத்தனை மணி நேர தூக்கம் நமது உடலுக்கு அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி, யோகா, உணவு எல்லாமே குறித்த வேளைகளில் நடக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

இந்த தினசரி நடைமுறைகளுடன் பிரார்த்தனை, தியானம், பிரணாயாமம் போன்றவற்றை பின்பற்ற முடிந்தால் நல்லது.

உளவியல் ரீதியான பிரச்சினைகள், குழப்பமான எண்ணங்கள், தடுமாற்றமான உணர்வுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் உணவு முறை, உடற்பயிற்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது பயனற்றதாகும்.

அமைதியான மனநிலை இல்லாமல் குழப்பமாக இருப்பதனால் மனஅழுத்தம், உணவு சரியாக உண்ணாமை, படப்படப்பு, சோம்பல் ஆகியன நேரும்.

வடிகால் காணப்படாத உணர்ச்சிகள் நமது உடல் நலனுக்கு கெடுதல் தரும்.

நீண்ட நாட்களாக மன அழுத்தத்துடன் இருப்பது, நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடுகளை பாதித்து (அட்ரினல், தைராய்டு போன்றவை) உடலின் வளர்சிதை மாற்றத்தினைப் பாதிக்கும்.

தியானம், யோகா, பிரார்த்தனை ஆகிய ஆன்மீக பயிற்சிகள் பாதிக்கப்பட்ட மனநிலை, உடல்நிலைகளை சரிப்படுத்த உதவுகின்றன.

ஆகவே ஏற்கனவே இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்வதில்லை யெனில் தினமும் 10-15 நிமிடப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

திரிபலா செரிமான மண்டலத்தை சுத்தம் செய்து நச்சுப்பொருட்களை வெளியேற்றும், திசுக்களுக்கு ஊட்டமும், புத்துணர்வும் தரும். இரவு படுக்கும் முன் திரிபலா மாத்திரை 2 சாப்பிடலாம்.

* வல்லாரையை உணவில் அடிக்கடி சேர்க்கலாம்.

* பன்னீர்பூக்கள்: 50 கிலோ எடை என்றால் 50 பூக்களை இரவே ½ லிட்டர் தண்ணீரில் போட்டு வைத்து காலையில் வெறும் வயிற்றில் 3 மாதம் சாப்பிடலாம்.

* மணலிக்கீரை: 20மி.லி. சாறு காலை வெறும் வயிற்றில் சாப்பிட ஒரு மாதத்திலேயே வயிறு தட்டையாகும். சோர்வு நீங்கி உற்சாகம் வரும்.

* சீந்தில்கொடி: வழக்கமான டீக்கு பதிலாக அருந்தலாம்.

* காட்டு ஏலக்காய்: இரவில் 2 கிராம் பசும் பாலில் கலந்து சாப்பிட தேவையற்ற கொழுப்பு கரையும்.

* கிராம்பு, ஜாதிக்காய்: வயிறு சுருங்கும், வாயுத்தொல்லை நீங்கும். உடல் எடை குறையும்.

* கத்திச்சாரணை: வேரைச் சாம்பலாக்கி 1 கிராம் காலை, மாலை இரு வேளையும் உணவுக்கு முன் சாப்பிடலாம்.

* கொள்ளுக்காய் வேர்: 20 கிராம் வேர்ச்சூரணத்தை 1 லிட்டர் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து ½ லிட்டராக்கி காலை, மதியம், இரவு உணவுக்கு முன் 3 மாதம் சாப்பிட தேவையற்ற கொழுப்பு கரையும்.

இவ்வாறு ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகளை பின்பற்றும் போது எடை குறைவதோடு மட்டுமல்லாமல் முழுமையான ஆரோக்கியம் பெறவும் வழி வகுக்கும். ஆகவே தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று தீவிர முயற்சியும், கட்டுப்பாடும் கொண்டு பலன் பெறலாம்.

-டாக்டர். ஜெ. விஜயாபிரியா

(போன் 0422-4322888, 2367200)Post a Comment

Protected by WP Anti Spam