தமிழ், தெலுங்கில், ஒரே நேரத்தில் பொட்டு வைக்க வருகிறார் பரத்..!!

Read Time:1 Minute, 36 Second

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் பொட்டு. இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அம்ரீஷ் இசையமைத்துள்ள இப்படத்தை வடிவுடையான் இயக்கியுள்ளார். மருத்துவ கல்லூரி பின்னணியில் ஹாரர் படமாக உருவாகி இருக்கிறது பொட்டு. தமிழில் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு யு/ஏ பெற்று, தெலுங்கு சென்சாருக்காக காத்திருந்த பொட்டு தற்போது தெலுங்கில் சென்சார் செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

எனவே வருகிற பிப்ரவரி மாதம் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. தெலுங்கில் என்.கே.ஆர். பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பொட்டு படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதர்வாவுடன் மோதும் பாலிவுட் நடிகர்..!!
Next post முன்னணியின் முக்கியமான மாற்றம்..!! (கட்டுரை)