ரணில் போட்ட ஆட்டத்திற்குள் மறைந்துள்ள மர்மம்…!!(வீடியோ)

Read Time:1 Minute, 56 Second

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏன் வளைந்து வளைந்து நடனமாடினார் என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விளக்கம் அளித்துள்ளார்கே

காலையில் நடைபெற்ற பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் நேற்று அவர் இது பற்றி விளக்கமளித்துள்ளார்.

அவர் மேலும் தமது உரையில்…

இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த அரசாங்கம் சொல்லக்கூடிய அனைத்து பொய்களையும் கூறி ஆட்சிக்கு வந்தது.

மற்றையவர்களை இழிவுபடுத்தி, அனைவரையும் ஏமாற்றியே ஆட்சி பீடம் ஏறியது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பிரதமர் ரணிலின் காலடியில் வைத்து பூஜிக்கின்றது.

பண்டாரநாயக்கவின் கொள்கைகள் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

மத்திய வங்கியை இந்த அரசாங்கம் கொள்ளையிட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கை வெளியிடப்படவிருந்த தினத்திற்கு முன் தினம் இரவு பிரதமர் வளைந்து வளைந்து நடமாடினார்.

நாம் அனைவரும் பிரதமரின் ஆட்டம் பற்றி பேசினோம்.

எனினும், ஏன் பிரதமர் அவ்வாறு நடனமாடினார், மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த உண்மைகளை மூடி மறைக்கவும் மக்களை திசை திருப்பவுமே இவ்வாறு நடனமாடினார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்: நடிகர் ரஜினிகாந்த்…!!
Next post மருத்துவ அற்புதம் ‘இன்சுலின்’…!!