சருமத்தின் அழகை பாதுகாக்கும் உணவுகள்..!!

Read Time:2 Minute, 59 Second

எண்ணெய் பசை தன்மையுடைய சருமத்தை கொண்டவர்கள் அடிக்கடி முகப்பரு பாதிப்புக்கு ஆளாவார்கள். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதே எண்ணெய் பிசுபிசுப்பு சருமத்துக்கும், முகப்பருவுக்கும் தீர்வாக அமையும். அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம்.

நீர்ச்சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காய் சருமத்தை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். முகப்பரு பிரச்சினையில் இருந்தும் சருமத்திற்கு பாதுகாப்பும் தரும்.

பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் போன்ற வற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் இருக்கிறது. அவைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் எண்ணெய் பசை சருமத்திற்கு விரைவில் தீர்வு காணலாம்.

ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்கள் வைட்டமின் சி நிரம்பப்பெற்றவை. அவை சருமத்தில் படியும் எண்ணெய் பிசுபிசுப்புத்தன்மையை நீக்க உதவும்.

கீரை வகைகளில் எண்ணெய்யோ, கொழுப்போ அதிகம் இருப்பதில்லை. அதிலிருக்கும் நார்ச்சத்து சருமத்தில் படிந்திருக்கும் எண்ணெய் தன்மையை நீக்க உதவும்.

திராட்சையில் இருக்கும் வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுகளை நீக்கும். அதில் நீர்ச்சத்தும் அதிகம் இருப்பதால் சருமத்திற்கு நலம்பயக்கும்.

மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முகப்பருவை தடுக்கவும், எண்ணெய் சருமத்தை மேம்படுத்தவும் துணைபுரியும்.

புராக்கோலியும் முகப்பரு அபாயத்தை குறைக்கும். எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் கட்டுப்படுத்தும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் செரிமான பிரச்சினைகளை தடுக்கும். முறையான ஜீரணம் சருமத்திற்கு நல்லது.

கருப்பு சாக்லேட்டுகளும் உடலில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.

சரும பொலிவை சீராக பராமரித்து வர அடிக்கடி இளநீர் பருக வேண்டும். அது சருமத்தை சுத்தமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க துணை புரியும். இளமையையும் பாதுகாக்கும்.

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டுவருவதும் சருமத்திற்கு ஏற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம் பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா?..!!
Next post பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்…!!